பாலங்கள் போட்டாலும் பெரும்பாடுபடும் பெருங்களத்தூர்.. சென்னையின் நுழைவாயிலில் மாற வேண்டிய 2 விஷயம்
சென்னை: சென்னை மக்கள் பெருங்களத்தூர் செல்ல முன்பு போல் கஷ்டப்படத் தேவையில்லை.. சென்னையை விட்டு வெளியே எளிதாக சென்றுவிடலாம். ஆனால் சென்னைக்குள் அப்படி வந்துவிட முடியாத நிலை இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இரும்பலியூர் பாலம் சிறியதாக உள்ளது. அதை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. அதேபோல் பெருங்களத்தூரில் பாலம் இறங்கும் இடத்தில் உள்ள சிக்னலும் நெரிசலுக்கு காரணமாக உள்ளது. இதற்கு என்ன தான் தீர்வு என்பதை பார்ப்போம்.
சென்னையில் ஒரு காலத்தில் பெருங்களத்தூரை தாண்டுவது என்பது தண்டனையாக இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு நெரிசல் இருக்கும். அனைத்து பேருந்துகளும் சந்திக்கும் இடமாக இருந்தது . கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்ட பிறகு எல்லாமே மாறியது. அத்துடன் பெருங்களத்தூரில் போடப்பட்ட பாலங்களும் நல்ல பலனை தந்தன. இதனால் சென்னையை விட்டு வெளியே செல்பவர்கள் இப்போது வரை எளிதாக சென்று வருகிறார்கள்.

பெருங்களத்தூர் மேம்பாலம்
ஆனால் சென்னைக்குள் நுழைய பெருங்களத்தூரை தாண்டும் போது பெரும் பாடுபட வேண்டியதிருக்கிறது. காரணம் பெருங்களத்தூரில் உள்ள சிக்னல் தான் மிக முக்கிய காரணம். எல்லாருமே பாலத்தில் ஏறித்தான் செல்கிறார்கள். அதனால் உண்மையில் பெருங்களத்தூர் மக்களால் பாலத்தில் மாலை நேரங்களில் யூடர்ன் கூட எடுத்து ஊருக்குள் போக முடியாது. அந்த அளவிற்கு சவாலான மேம்பாலமாக பெருங்களத்தூர் மேம்பாலம் இருக்கிறது. வண்டலூரை தாண்டி 4 லேன்களில் வரும் வாகனங்கள் அப்படியே மேம்பாலத்தில் ஏறுகின்றன. இதுதவிர பெருங்களத்தூர் மக்களும் அந்த பாலத்தில் ஏறித்தான் ஊருக்குள் போக வேண்டியதிருப்பதால், அப்படியே பாலம் ஸ்தம்பிக்கிறது.
ஸ்தம்பிக்கின்றன
பாலத்தில் ஒரே நேரத்தில் ஒரு பேருந்து, கார் மட்டுமே போக முடியும். இதில் தான் அத்தனை வாகனங்களும் ஏறுகின்றன. அப்படி ஏறிய உடன் கீழே இறங்கும் போது, இரண்டு லேனாக சாலை மாறுவதால், எல்லா வாகனங்களும் அப்படியே ஸ்தம்பிக்கின்றன.. அங்கு சிக்னலும் இருப்பதால் நிறுத்தி நிறுத்தி தான் வாகனங்கள் செல்கின்றன. இரும்பலியூர் பழைய பாலம் மிகக்சிறிய பாலம் ஆகும். அங்கு இரண்டு வாகனங்களுக்கு மேல் கடந்து செல்ல முடியாது. இதனால் அங்கு நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
இரும்பலியூர் பாலம்
அங்கு பாலத்தை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பாலம் முடிந்தால் ஓரளவு நெரிசல் குறையும். பெருங்களத்தூரில் நெரிசல் குறைய வேண்டும் என்றால், அங்கு உள்ள சிக்னல்களை நிரந்தரமாக மூட வேண்டும்.. அப்படி மூட வேண்டும் என்றால், அதற்கு முன்பாக அரைகுறையாக நிற்கும் கிழக்கு பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ரோட்டரி பாலப்பணியை முடிக்க வேண்டும். அத்துடன் தாம்பரம் சேலையூரை இணைக்கும் பாதைக்கு மேம்பாலம் இணைந்து புறவழிச்சாலைக்கு நிரந்த தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
சேலையூர் தாம்பரம்
அப்படி செய்தால் மட்டுமே வேளச்சேரி, மேடவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதி மக்கள் எளிதாக ஊருக்குள் வராமலேயே சேலையூரில் இணைந்து சென்றுவிட முடியும். அதற்கு பணிகள் நடக்கிறது என்றாலும், கிழக்கு பெருங்களத்தூரில் உள்ள மின் சாதனங்களை வேறு இடத்தில் வைக்க வேண்டும். அங்குள்ள மரங்களையும் அகற்ற வேண்டியது உள்ளது. இந்த பணிகள் முடிந்து பாலப்பணி முடிந்தால் மட்டுமே பெருங்களத்தூருக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதுவரையில் பெருங்களத்தூர் மக்களும், சென்னை புறநகர் பகுதி மக்களுக்கும் கஷ்டம் தொடரத்தான் செய்யும்.
அமைச்சர் அறிவிப்பு
இதனிடையே அண்மையில் சட்டசபையில் பேசிய அமைச்சர் எவ வேலு, பெருங்களத்தூர் முதல் மாடம்பாக்கம் சந்திப்பில் இணைக்கும் வகையில், தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலையின் தொடர்ச்சியாக ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் குறுக்கே உயர்மட்டப்பாலம் அமைக்கப்படும் என்று கூறினார். ராஜ கீழ்ப்பாக்கத்தில் இருந்து அகரம் தென் வழியாக பெருங்களத்தூர் மார்க்கத்தில் 1.4 கி.மீ. நீளத்திற்கு தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றும் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications