பெருங்குடி முதல் துரைப்பாக்கம் வரை! அப்படியே அடையாளம் தெரியாமல் மாற போகுது! அசர வைக்கும் 8 அறிவிப்பு
சென்னை: பெருங்குடி- துரைப்பாக்கம் சாலை முழுக்க புதிய ஹை ரைஸ் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. 8 முக்கியமான அறிவிப்புகள் இந்த சாலையில் கொண்டு வரப்பட உள்ளன.
சென்னை பெருங்குடியில் புதிய ஐடி பார்க் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் ஏற்கனவே ஐடி பூங்காக்கள் உள்ள நிலையில் புதிய ஐடி பார்க் ஒன்று அமைக்கப்பட உள்ளது.

அதன்படி பெருங்குடி சுங்கச்சாவடி அருகே பிரமாண்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டப்பட உள்ளது. இது அமைக்க முன்வந்துள்ள சத்வா குழுமம் தனது திட்டத்தை சமீபத்தில் திருத்தியுள்ளது. தற்போது 21 தளங்கள் கொண்ட 4 கோபுரங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 டவருக்கு பதில் 4 டவர் அமைக்கப்படும். அதன் பரப்பளவு முன்பு 3.81 லட்சம் சதுர மீட்டரில் இருந்து 5.24 லட்சம் சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய உயர் கட்டிடங்கள்: பெருங்குடி- துரைப்பாக்கம் சாலை முழுக்க புதிய ஹை ரைஸ் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. சென்னையின் ரியல் எஸ்டேட் ஹாட்ஸ்பாட்டாக இந்த சாலை மாற உள்ளது. பல உயரமான கட்டிடங்களை இந்த சாலை பெற உள்ளன.
1. WTC குடியிருப்பு வளாகம் (2x 26F & 10F மேரியட்)
2. DLF டவுன்டவுன் (30F+ அலுவலக கோபுரத்துடன் 6.8 மில்லியன் சதுர அடி அலுவலகம்)
3. அப்பாசாமியின் அல்டெஸா (2x 20F மற்றும் 1x 40F குடியிருப்பு கோபுரங்கள்)
4. சத்வா IT பூங்கா (4 x 20F)
6. ஃபோரம் ஒன்று OMR (1.7 மில்லியன் சதுர அடி மால்: சென்னையில் மிகப்பெரியது)
7. பாஷ்யம் டவுன்ஷிப் (6x 33F + ஹைப்பர் மார்க்கெட்)
6. அப்பாசாமியின் விங்ஃபீல்ட் (14F பிரீமியம் சொகுசு கோபுரம்)
7. எலிவேட் 21 (21F சொகுசு குடியிருப்பு கோபுரம்)
8. ஒலிம்பியா பினாக்கிள் (10F உடன் பணிபுரியும் அலுவலக கோபுரம்)
ஐடி பார்க்குகள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று சமீபத்தில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல்படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் பூங்கா அமைக்க முடிவு; சமீபத்தில்தான் தஞ்சையில் , 92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் தஞ்சாவூரில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன தற்போது நிலையில் போர்வெல் பணிகள் முடிந்து தரைத்தளம் முடிந்து 1 தளம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பிளான்படி பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஹை ரைஸ் : இதற்காக இந்த மூன்று மாவட்டங்களில் பல்வேறு விதிகள் மாற்றப்பட உள்ளன. ஐடி பார்க்க தொடங்க வசதியாக மின்சார சலுகைகள் , பல மாடி கட்டிடம்கட்ட வசதியாக எப்எஸ்ஐ சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. தஞ்சையிலும் இந்த விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications