ரொம்ப தப்பு.. மாமிசம் சாப்பிடும் ஆண்களோடு "உறவு" கொள்ளாதீர்கள்.. பெண்களுக்கு "பீட்டா" பரபர கோரிக்கை
சென்னை: மாமிசம் சாப்பிடும் ஆண்களோடு பெண்கள் பாலுறவு கொள்ள கூடாது என்று பீட்டா சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விலங்குகளின் உரிமைகள் பற்றி குரல் எழுப்பும் அமைப்பு பீட்டா எனப்படும் People for the Ethical Treatment of Animals (PETA). விலங்குகளை கொடுமைப்படுத்த கூடாது, அவற்றை கொல்ல கூடாது என்று கோரிக்கை விடுக்கும் இந்த அமைப்பு சமயங்களில் மனித உரிமைக்கு எதிராக பேசுவது வழக்கம்.
உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் பீட்டா அமைப்பு சமயங்களில் அசைவம் சாப்பிடும் நபர்களை குற்றவாளிகள் போல பீட்டா அமைப்பு பார்ப்பது வழக்கம்.

பீட்டா
இந்த நிலையில்தான் மாமிசம் சாப்பிடும் ஆண்களோடு பெண்கள் பாலுறவு கொள்ள கூடாது என்று பீட்டா சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்பாக பெண்கள் செக்ஸ் ஸ்டிரைக் செய்ய வேண்டும் என்று பீட்டா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவியல் முறைப்படி ஆண்கள்தான் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் மாமிசம் சாப்பிட்டு காலநிலை மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறார்கள்.

மாமிசம்
41 சதவிகித பசுமை வாயுக்கள் வெளியாக மாமிசம் சாப்பிடுவதே காரணம். முக்கியமாக நகரங்களில் இருக்கும் ஆண்கள்தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். ஒரு கையில் பீர் வைத்துக்கொண்டு குடிப்பார்கள். இன்னொரு கையில் கேசில் சமைக்கப்பட்ட மாமிசங்களை சாப்பிடுவார்கள். இதை ஆண்தன்மை என்று அவர்கள் நினைக்கிறார்கள். மாமிசம் சாப்பிடுவது ஒரு வகை ஸ்டைல் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது ரொம்ப தவறு.

ஆண்கள்
இது விலங்குகளை மட்டும் கொல்வது இல்லை. இது பூமிக்கும் கெடுதல் விளைவிக்கிறது. பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட்டு 40 சதவிகித அதிக பசுமை வாயு வெளியாக காரணமாக இருக்கின்றனர். ஆண்கள் தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். கடந்த 10 வருடங்களில் மாமிசம் சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை யு.கேவில் 17 சதவிகிதம் குறைந்து உள்ளது. ஆனால் இது போதுமானது இல்லை.

பெண்கள்
நாம் ஒவ்வொரு வருடமும் 1 பில்லியன் சிக்கன், மாடு, பன்றிகளை கொல்கிறோம்.இதை தடுக்க வேண்டும். நாம் வீகன் டயட்டிற்கு மாற வேண்டும். காய்கறிகளை சாப்பிட வேண்டும். பெண்கள் ஆண்களிடம் இதை எடுத்துரைக்க வேண்டும். இல்லை என்றால் பெண்கள் ஆண்களுடன் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும். உடலுறவிற்கு முன் அவர்களின் சுவாசம், நாக்குகளை சோதனை செய்ய வேண்டும். மாமிசம் வாசனை வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

தடை
மாமிசத்தை நிறுத்து இல்லை என்றால் உடலுறவு இல்லை என்று சொல்ல வேண்டும். ஆண்கள் அப்போதுதான் மாமிசத்தை நிறுத்துவார்கள். அவர்கள் வீகனாக மாறும் வரை பெண்கள் செக்ஸ் ஸ்டிரைக் செய்ய வேண்டும். இதன் மூலம் இன்னும் பலர் வீகனாக மாறுவார்கள் என்று பீட்டர் கூறியுள்ளது. தனிப்பட்ட மனிதர்களின் உரிமைக்கு எதிரான பீட்டாவின் இந்த கருத்தை பலரும் எதிர்த்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications