கறுப்பு தோல், கோவணம்.. என்ன இதெல்லாம்? பாட புத்தகத்தில் இப்படியா? பீட்டர் அல்போன்ஸ் சரமாரி கேள்வி
சென்னை: சனாதனம் குறித்து சமீபத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாட புத்தகங்களில் வருணாசிர தர்மத்தை விளக்குவதாக சூத்திர மக்களை இழிவுபடுத்தியுள்ளதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்திரப் பிரதேசம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசு சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறது.
இப்படி இருக்கையில் தமிழக அரசின் பாட புத்தகத்திலேயே சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேலெழுந்திருந்தது. அதாவது, தமிழக அரசின் 12ம் வகுப்பு 'அறிவியலும் இந்திய பண்பாடும்' எனும் பாட புத்தகத்தில் அமைச்சர் உதயநிதி கூறிய கருத்துக்கு எதிராக 'சனாதனம் ஓர் அறம். வர்ணாஸ்ரமத்தில் உயர்வு தாழ்வு இல்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதனையடுத்து இந்த விமர்சனங்கள் குறித்து பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "கடந்த 2018ஆம் ஆண்டு கொண்டு வந்த பாடப்புத்தகத்தில் சனாதனம் குறித்த பகுதி இடம்பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படுவதால் அடுத்தாண்டு பாடப்புத்தங்கங்கள் மாற்றியமைக்கப்படும். இருப்பினும் இவ்விவகாரம் குறித்து ஆராய கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். இவரது பதிலையடுத்து சர்ச்சைகள் ஓய்ந்தன.
ஆனால் தற்போது மற்றொரு சர்ச்சை எழுந்திருக்கிறது. அதாவது சிபிஎஸ்சி பாட புத்தகத்தில் வருணாசிர தர்மத்தை விளக்குவதாக சூத்திர மக்களை இழிவுப்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் x சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது, "CBSE பாடத்திட்டத்தில் 6ம் வகுப்பு சரித்திர புத்தகத்தில் 2ம் பாடமாக வருணாசிர தர்மத்தை விளக்கும் பாடத்தில் கீழே காணும் படத்தினைப்போட்டு சூத்திரர்களுக்கு மட்டும் கோவணத்தைக் கட்டிவிட்டுள்ளார்களே! சூத்திரர்கள் அனைவருக்கும் பணிவிடை செய்பவர்கள் என எழுதியுள்ளதே! இதைப்படிக்கும் பிஞ்சு உள்ளங்களில் சாதி ஆணவம் எனும் நச்சு கலக்காதா? இது உண்மையாக இருப்பின் இப்பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
-
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு












Click it and Unblock the Notifications