அழுகிய மனசு.. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் சாத்தானின் பிள்ளைகளா? சீமானை விளாசிய பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என சீமான் அழைப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சம் என தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "திரு.சீமான் அவர்கள் தமிழக இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் "சாத்தானின் பிள்ளைகள்" என்றழைப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சம்.மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்களைப்பற்றி எப்படி வேண்டுமானாலும் பேசலாம், என நினைப்பது ஒரு அழுகிய மனதின் அவலம்! அரசு கவனிக்க வேண்டும்!" என்றார்.

மணிப்பூரில் குகி பழங்குடியின பெண்களுக்கு எதிராக கடந்த மே மாதத்தில் இருந்து அரங்கேற்றப்பட்டு வரும் கொடூர தாக்குதல்களை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்து வருகிறோம்.
ஆனால், அவை சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் கடந்துவிட்டன. தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, இறுதியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடைபெறும் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் பெரிய பொறுப்பேற்க வேண்டியதே இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும்தான்.
தொடர்ச்சியாக பல ஆண்டுகள் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் 18 விழுக்காடு வாக்குகளை போட்டு போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள்தான்." என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், "சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான, அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். முன்பு தாய் மதத்திற்கு திரும்புங்கள் என சங்கப்பரிவார் தொண்டர் போல் பேசியவர் சீமான்.
தற்போதைய அவரது சிறுபான்மை வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். இத்தகைய வேடதாரிகளிடம் தமிழக மக்கள் எச்சரிகையாகவே இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications