ஜாதி.. மிகச் சிறந்த மாணவர்கள் படிக்கும் ஐஐடி மெட்ராசுக்கு இந்த நிலைமையா.. பீட்டர் அல்போன்ஸ் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் மிக சிறந்த மாணவர்கள் பயிலும் ஐஐடி மெட்ராஸில் ஜாதி வெறி என்பது பெரும் அவமானம், கல்வி என்பது பட்டங்கள் மட்டுமல்ல. அது ஒரு விசால பார்வை.

விஞ்ஞான அணுகுமுறை. அதை தர முடியாத ஐஐடி இருந்தால் என்ன? அழிந்தால் என்ன? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டியில் கல்வி கற்க வேண்டும்; பணிபுரிய வேண்டும் என்பது பலரது கனவாகும். இதற்காகத்தான் கல்வி கற்கவும், பணியாற்றவும், சென்னை ஐ.ஐ.டிக்கு வருகிறார்கள்.

 ஐஐடியில் ஜாதி

ஐஐடியில் ஜாதி

ஆனால் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகமும் வளாகமும் ஜாதி, வர்க்கம், மதம் என அனைத்திலும் பேதம், ஏற்றத்தாழ்வு பார்க்கிற இடமாக மாறிவிட்டது. ஜாதி, வர்க்க, மத ரீதியான சக ஆதிக்க ஜாதி மாணவர்களின் ஒடுக்குமுறை, அவர்களுடன் கை கோர்க்கும் பேராசிரியர் சமூகம் இவற்றால் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நிகழும் தற்கொலைகளில் சில வெளி உலகத்துக்கு தெரியவருகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாணவி பாத்திமா லத்தீப் மர்ம மரணம் இங்கு நடந்து நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

 பேராசிரியர் ராஜினாமா

பேராசிரியர் ராஜினாமா

இந்த ஜாதி பாகுபாடு வரிசையில் உதவிப் பேராசிரியரான விபின் என்பவரும் இணைந்திருக்கிறார். சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம், ஜாதி ரீதியான பாகுபாட்டை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதால் தம்மால் இங்கு பணிபுரியவே இயலாத நிலை உருவாகிவிட்டது என்பதால், பணியில் இருந்து வெளியேறுகிறேன் என்று இ மெயில் மூலம் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கு பேராசிரியர் விபின் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 பேராசிரியர் உடல் கண்டெடுப்பு

பேராசிரியர் உடல் கண்டெடுப்பு

இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் நேற்று இரவு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் பகுதி நேர பேராசிரியர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த பேராசிரியர், பிடெக் படிப்பை கடந்த ஏப்ரல் மாதம்தான் முடித்துள்ளார். பிறகு, புராஜக்ட் அசோசியேட் மற்றும் பகுதி நேர பேராசிரியராக ஐஐடியில் பணிக்கு சேர்ந்துள்ளார். 30 வயதாகும் உன்னி கிருஷ்ணன் நாயரின் பூர்வீகம் கேரள மாநிலமாகும். நேற்று காலையில்தான் கேரளாவிலிருந்து ஐஐடிக்கு திரும்பியுள்ளார். இரவில் அவரது உடல் ஹாக்கி கிரவுண்ட் பகுதியில் கிடந்துள்ளது. உன்னி கிருஷ்ணனின் தந்தை, இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். உன்னிகிருஷ்ணன் வேளச்சேரியில் இரு ரூம் மேட்களுடன் தங்கியிருந்தார்.

 போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்தாரா என்பது தெரியவில்லை. ஜாதி கொடுமை குறித்த தகவல்கள் வெளியாகும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் அங்கு நடந்துள்ளது. 11 பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதம் அவரது அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகியபோதிலும் அது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சட்டப்பிரிவு 174ன்கீழ், வழக்குப் பதிவு செய்து கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

 பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்

பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவருமான, பீட்டர் அல்போன்ஸ், ஜாதி வெறியால் பேராசிரியர் ராஜினாமா செய்த செய்தியை ஷேர் செய்து, ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் மிக சிறந்த மாணவர்கள் பயிலும் ஐஐடி மெட்ராஸில் ஜாதி வெறி என்பது பெரும் அவமானம், கல்வி என்பது பட்டங்கள் மட்டுமல்ல. அது ஒரு விசால பார்வை. விஞ்ஞான அணுகுமுறை. அதை தர முடியாத ஐஐடி இருந்தால் என்ன? அழிந்தால் என்ன? என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+