தேர்தல் முடிவுக்கு பின்னர்.. சட்டென்று உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய விலை என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் கடந்த 4 நாட்களாக உயந்த பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 93.15 ரூபாய், டீசல் லிட்டர் 86.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 2017-ம் ஆண்டு முதல் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்ததால் வாகன ஓட்டிகள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் தமிழகம், புதுவை, கேரளா உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதியில் இருந்து தொடர்ந்து 18 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. இதற்கு மாறாக பெட்ரோல், டீசல் விலை சில காசுகள் குறையத்தான் செய்தது.
தேர்தல் நடப்பதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் உலா வந்தன. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதன்பின்னர் மீண்டும் விலையை உயர்த்தின.
இதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்து வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயராமல் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 93.15 ரூபாய், டீசல் லிட்டர் ரூ.86.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் கிரீன் சிக்னல்! கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் எதிரொலிக்குமா? -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்












Click it and Unblock the Notifications