ரொம்ப இழப்பு.. இன்று ஒருநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்.. வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

பெட்ரோல் டீசல் கொள்முதல் இன்று ஒருநாள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தியும், இன்று ஒருநாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.. அதில், மத்திய அரசு பெட்ரோல் - டீசலுக்கான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.8 மற்றும் ரூ.6 என விலை குறைத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எண்ணெய் நிறுவனங்கள் கலால் வரி குறைப்பு காரணமாக சில்லறை விற்பனை விலையை உடனடியாக மாற்றி அமைத்ததற்காக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறது.

 விளிம்பு தொகை

விளிம்பு தொகை

சில்லறை விற்பனையாளர்களாகிய எங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து இன்று வரை விளிம்பு தொகையை அதிகரித்து வழங்கவில்லை. 2017-ம் ஆண்டு 1 லிட்டர் பெட்ரோல் 60 ரூபாயானது. தற்போது 1 லிட்டர் பெட்ரோல் 104 ரூபாயாக உள்ளது. அதேபோல 1 லிட்டர் டீசல் 52 ரூபாயில் இருந்து 96 ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது விற்பனையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விளிம்பு தொகையாக பெட்ரோலுக்கு ரூ3.06; டீசலுக்கு ரூ 1.88 வழங்குகின்றன.

கட்டமைப்பு

கட்டமைப்பு

இதில் 70% நிர்வாக செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது. விளிம்பு தொகை கட்டமைப்பு என்பது கடந்த 2010-ம் ஆண்டில் உள்ள செலவினங்களுக்கான கணக்கீட்டை உள்ளடக்கியது. 12 ஆண்டுகளாகியும் இன்னமும் அதே நிலையே நீடிக்கிறது. கடந்த மே 21-ந் தேதி மத்திய அரசால் குறைத்து அறிவிக்கப்பட்ட சிறப்பு கலால் வரியால் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 9.12; டீசல் லிட்டருக்கு ரூ6.68-க்கு எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. இதனால் விலை குறைப்பு நாளில் ரூ2 லட்சம் முதல் ரூ10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.

 உரிமையாளர்கள்

உரிமையாளர்கள்

ஆகையால் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் மே 21-ந் தேதி சில்லறை விலை குறைப்பால் ஏற்பட்ட இழப்பை முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு ஈடுசெய்ய வேண்டும். இது குறித்து எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 31-ந் தேதி ஒரு நாள் மட்டும் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்த உள்ளோம். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விநியோகம் வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தன.

கொள்முதல்

கொள்முதல்

இதன்படி, சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தியும், இன்று ஒருநாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன... மேலும் கடந்த 2017 ஆண்டில் இருந்து இதுவரை கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

 இன்று அறிவிப்பு

இன்று அறிவிப்பு

இன்று நடக்கும் இந்த போராட்டத்தில் தமிழகம் கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்பட 24 மாநிலங்களில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.. ஆனால், கர்நாடகத்தில் மட்டும் இன்று பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் வேறுவிதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.. எண்ணெய் கிடங்குகளில் இருந்து எரிபொருள் கொள்முதல் ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகவும், ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அம்மாநிலம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

 அதே விலை

அதே விலை

இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமலேயே இருந்த நிலையில், சமீபத்தில் திடீர் விலை குறைப்பால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சற்று நிம்மதி அடைந்தனர்.... அப்போதிருந்து இன்றுவரை அதே விலையில் பெட்ரோல் விற்பனையாகிறது.. 10வது நாளாக இன்றும் அதாவது 31-ம் தேதி, பெட்ரோல் ரூ.102.63 க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+