சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 1 லி.பெட்ரோல் ரூ102.63; 1 லி. டீசல் ரூ94.24-க்கு விற்பனை- மேகாலயாவில் தலைகீழ் நிலவரம்

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் 97-வது நாளாக இன்றும் மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 க்கும் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Petrol, Diesel cost steady for 97th day

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ100ஐ தாண்டி விற்பனையானது. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ110க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் பின்னர் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் சிறு பகுதியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2 முறை குறைத்தது. தமிழக அரசும் பெட்ரோல் விலையை ரூ3 குறைத்தது.

பின்னர் கடந்த மே மாதம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ9; டீசல் விலையில் ரூ7.50 என குறைத்தது மத்திய பாஜக அரசு. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் குறைத்தன. இதனால் பெட்ரோல், டீசல் விலை சற்றே குறைந்தது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கவில்லை.

நாடாளுமன்ற லோக்சபாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக கடுமையாக விவாதம் நடந்தது. தமிழக எம்.பி.க்களும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே இது தொடர்பாக தமிழில் காரசார விவாதம் நடைபெற்றது. இதேபோல் தமிழக அரசு மீது பாஜக இது தொடர்பாக புகார் தெரிவிக்கிறது. இதற்கு தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பதிலடியும் கொடுத்து வருகிறார்.

ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்தல்-128 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது!ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்தல்-128 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது!

இந்நிலையில் சென்னையில் இன்று 97-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ102 .63, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24ஆக விற்பனையாகிறது. ஆனாலும் எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆனால் மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேகாலயாவில் பெட்ரோலுக்கான வரி ஒரு லிட்டருக்கு 13.5%அல்லது ரூ.11 எது அதிகமோ, அது வரியாகும். இதுதான் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது இந்த வரியானது 13.5% அல்லது ரூ.12 எது அதிகமோ அது வரி என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

English summary
The price of petrol, diesel has been kept steady for the 97th day on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X