சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதான் தேர்தல் முடிஞ்சிட்டதே.. இனி என்ன.. மீண்டும் உயர தொடங்கியது பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் உயர தொடங்கியது பெட்ரோல், டீசல் விலை!- வீடியோ

    சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது.

    இரண்டு மாதம் முன் தினமும் பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே இருந்தது. மத்திய அரசின் வரி ஒருபக்கம், எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றும் விலை ஒருபக்கம் என்று விலை உயர்ந்து கொண்டே இருந்தது.

    இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்பட்டது.

    நிறுத்தப்பட்டது

    நிறுத்தப்பட்டது

    ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்தியா முழுக்க பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் நிறுத்தப்பட்டது. மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று விலை ஏற்றம் நிறுத்தப்பட்டது. அதேபோல் பெட்ரோல் டீசல் விலை உயர்வும் தேர்தல் பிரச்சாரத்தில் பெரிய அளவில் பேசப்படவில்லை.

    விலை குறைப்பு

    விலை குறைப்பு

    அதுமட்டுமில்லாமல் பெட்ரோல் டீசல் விலை தினமும் குறைக்கப்பட்டும் வந்தது. தினமும் 10 பைசா, 20 பைசா வீதம் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது. 57 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது.

    இன்று உயர்வு

    இன்று உயர்வு

    இந்த நிலையில் 57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.3 நாட்களாக விலை மாற்றமின்றி டீசல் லிட்டருக்கு ரூ.68.26க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மக்கள் ஏமாற்றம்

    மக்கள் ஏமாற்றம்

    தேர்தலுக்காக அரசு மக்களை பட்டவர்த்தனமாக ஏமாற்றியது இதன் மூலம் தெளிவாகி இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது. ஒரே நாளில் 5 ரூபாய் 6 ரூபாய் என்று விலை ஏறினால் கூடா ஆச்சரியப்படுவதற்கில்லை.

    English summary
    Petrol and Diesel price hiked after 57 days after the results of 5 state elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X