5 மாநில சட்டசபைத் தேர்தல் : பெட்ரோல் டீசல் விலை உயர்வு இப்போதைக்கு இல்லை
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் பத்தாவது நாளாக எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
ஜூன் மாதம் முதலிலிருந்து உயரத் தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை எட்டியது. இந்தியாவின் சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன. போராட்டங்களை நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலித்தது.
5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் உள்ளது. இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 91.34 ரூபாயாகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 84.80 ரூபாயகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை இன்று 91.17 ரூபாயாகவும் டீசல் விலை 81.47 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா பெட்ரோல் விலை இன்று 87.24 ரூபாயாகவும் டீசல் விலை 80.21 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications