பாக்யராஜ் இறந்த நாளில் குஷ்பு போட்ட போஸ்ட்.. திட்டி தீர்த்த நெட்டிசன்கள்.. அதிரடி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் திடீர் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகை குஷ்பூ பகிர்ந்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

கடந்த ஜூன் 25-ஆம் தேதி கோவாவில், குஷ்பூ - சுந்தர்.சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் பாக்யராஜும், அவரது மனைவி பூர்ணிமாவும் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர். திருமண விழாவில் அவர் சிரித்தபடி அனைவருடனும் பேசிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சி முடிந்து சில மணி நேரங்களிலேயே பாக்யராஜ் காலமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Khushbu K Bhagyaraj Bhagyaraj

குஷ்புவின் குடும்ப போட்டோ

பாக்யராஜின் மறைவு நடந்த அதே நாளில், குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவா திருமணத்தில் எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் சுந்தர்.சி உடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இந்த பதிவை பார்த்த சில நெட்டிசன்கள், "பாக்யராஜ் மறைந்த நாளில் இந்த மாதிரி குடும்ப புகைப்படம் போட வேண்டிய அவசியம் என்ன?", "கொஞ்சம் காத்திருந்து போடலாமே" என்று விமர்சிக்கத் தொடங்கினர்.

குஷ்பூ பதிலடி

இந்த விமர்சனங்களை அமைதியாக கடந்து செல்லாமல், குஷ்பூ நேரடியாக பதிலளித்தார். அவர் கூறியதாவது, "உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எதற்காக என்னை பின்தொடர்கிறீர்கள்? விமர்சிக்க மட்டும் தானா? என் மகளின் திருமணம் நடந்து இன்னும் 48 மணி நேரம்கூட ஆகவில்லை. பூர்ணிமாவை உங்களை விட எனக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் என்னை அன்ஃபாலோ செய்து விடுங்கள். மகிழ்ச்சியாக இருக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது."என்று கூறியிருக்கிறார். இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முன்பே இரங்கல் பதிவு

இதற்கு முன்பாகவே பாக்யராஜின் மறைவுக்கு குஷ்பூ தனது சமூக வலைதளத்தில், "Rest in Peace Sir... உங்களுடன் கழித்த இனிய தருணங்கள் எப்போதும் என் நினைவில் இருக்கும். I will miss you..." என்று உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது.

Khushbu K Bhagyaraj Bhagyaraj

ரசிகர்கள் இருவிதமாக கருத்து

குஷ்பூவின் பதிலுக்கு சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் வெளியாகி வருகின்றன. ஒரு தரப்பினர், "மகளின் திருமண நினைவுகளை பகிர்வது அவருடைய தனிப்பட்ட உரிமை. அதற்கும் பாக்யராஜின் மறைவுக்கும் தொடர்பு இல்லை" என்று ஆதரித்து வருகின்றனர்.

மற்றொரு தரப்பினர், "சில நேரங்களில் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கலாம். அதனால் தான் ரசிகர்கள் கேள்வி கேட்டார்கள்" என்று தங்களது கருத்தையும் பதிவு செய்து வருகின்றனர். ஒருபுறம் பாக்யராஜின் மறைவால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியிருக்க, மறுபுறம் குஷ்பூவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+