புதிய உச்சம் தொட்டது.. சென்னையில் சதம் அடித்தது பெட்ரோல் விலை.. டீசல் விலை நிலவரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்தது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் சதத்தை தொட்டு உள்ளது.

Recommended Video

    மீண்டும் சதம் அடித்த பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் கவலை!

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை வைத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்தியாவில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு தற்போது 100 ரூபாயை தாண்டி உள்ளது.

    Petrol, diesel price touched all-time high in India: Chennai touches 100 again

    இந்தியாவிலும் கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் உயர்த்தப்படாமல் இருந்தது. இடையில் சில முறை பெட்ரோல் விலை இடையில் 20 பைசா குறைக்கப்பட்டது. டீசல் விலையும் 5 முறை 20 பைசா குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப்பட்டு வருகிறது.

    நேற்று புதிய உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று மேலும் அதிகரித்தது.

    சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்தது. டீசல் விலையில் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்தது.பெட்ரோல் 100.01 ரூபாய்க்கும், டீசல் 95.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்பு தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை மாநில அரசின் வரி குறைப்பால் 3 ரூபாய் குறைந்தது. இதனால் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் கீழ் சென்றது. ஆனால் தற்போது எண்ணெய் நிறுவனங்கள் விலை ஏற்றியதால் மீண்டும் இதன் விலை ரூ. 100ஐ கடந்து உள்ளது.

    தற்போது டெல்லியில் பெட்ரோல் 102.39 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் 90.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    பெங்களூரில் பெட்ரோல் விலை 105.97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 96.36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மும்பையில் பெட்ரோல் விலை 108.51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 98.53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கும் பெரு நகரங்களில் ஒன்றாக மும்பை உள்ளது.

    ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 103.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 97.89 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+