ஒரு மாதத்திற்கும் மேலாக.. இன்றும் உயராத பெட்ரோல், டீசல் விலை.. தற்போதைய நிலவரம் என்ன?!
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த ஏற்றம்மும் செய்யப்படவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஏற்றப்படாமல் உள்ளது.
தொடர்ந்து கடந்த 34 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஏற்றமும் செய்யப்படவில்லை. மாறாக இடையில் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை தலா 60 பைசா குறைக்கப்பட்டது. பெட்ரோல் டீசல் விலையை தனியார் நிறுவனங்கள் ஏற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் தினமும் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்தது.

100 ரூபாயை தொடும் அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை சென்றது. இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் திடீரென இந்த விலை உயர்வு நிறுத்தப்பட்டது. 5 மாநில சட்டசபை தேர்தல் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மேற்கு வங்கம்,அசாமில் முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் நாளை தமிழகம், கேரளாவில் தேர்தல் நடக்கிறது.
இந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றம் செய்யப்படவில்லை.
சென்னையில் பெட்ரோல் விலை 91 33 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 95.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 80.49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 85.40ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 84.49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 93.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 96.59 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதே சமயம் இது தேர்தலுக்காக எடுக்கப்பட்ட முடிவு இல்லை, பெட்ரோல், டீசல் விலை வருகிற நாட்களில் கண்டிப்பாக குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications