பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்கிறது.. புதுவையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தின் அருகில் உள்ள புதுவையில் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வருகிற 1 ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் ரூ.2 வீதம் அதிகரிக்கிறது. பெட்ரோல் டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வருகிற 1 ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் ரூ.2 வீதம் அதிகரிக்கிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் பல்வேறு பொருட்களுக்கு தமிழகத்தை விட வரி குறைவாக உள்ளது. இதனால் பொருட்களின் விலையையும் தமிழகத்துடன் ஒப்பிடும் போது குறைவாக இருக்கும். அந்த வகையில் பெட் ரோல், டீசலும் தமிழகத்துடன் ஒப்பிடும் போது ஒரு லிட்டருக்கு ரூ.8 ரூபாய் வரை குறைவாக உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு
தமிழகத்தில் தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் 101.3 ரூபாய்க்கு, டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 92.61க்கும் விற்பனையாகிறது. புதுவையில் வாட் வரி குறைவாக வசூலிக்கப்படுகிறது. தற்போது பெட்ரோலுக்கு வாட் வரி 14.54 சதவீதமும், காரைக்காலில் 14.55 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. இதனால் புதுவையில் தற்போது பெட்ரோல் ரூபாய் 94.26 க்கும் டீசல் ரூபாய் 84.48 க்கும் விறபனையாகிறது.
இந்த நிலையில், அரசின் வரி வருவாயை பெருக்கும் விதமாக புதுவையில் வாட் வரியை உயர்த்த புதுவை அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது வாட் உரி உயர்த்தப்பட்டு அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் புதுவையில் பெட் ரோலுக்கான வாட் வரி 16.98 சதவீதமாகவும், காரைக்காலில் 16.99 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.2 வரை விலை உயருகிறது
அதேபோல, டீசலுக்கான வாட் வரி 11.22 சதவீதமாகவும் காரைக்காலில் 11.23 சதவீதமாகவும் உயர்கிறது. இதேபோல் மாகி, ஏனாம் பிராந்தியங்களிலும் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு உடனடியக அமலுக்கு வரவில்லை எனவும் புத்தாண்டு முதல் அதாவது, ஜனவரி மாதம் 1 ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என தெரிவிகப்பட்டுள்ளது. இந்த வாட் வரி உயர்வு மூலம் புதுவையில்,பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.1.25 முதல் ரூ.2 வரை விலை உயருகிறது.
புதுவையில் தற்போது பெட்ரோல் ரூ.94.26, காரைக்காலில் ரூ.94.03 எனவும், டீசல் புதுவையில் 84.48, காரைக்காலில் ரூ.84.35 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. தொலைவுக்கு ஏற்ப ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் 5 முதல் 10 காசுகள் வரை வித்தியாசம் இருக்கும். விலை உயர்வால், புதுவை அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
புதுவையில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும் காரணத்தால், புதுவை எல்லையை ஒட்டிய வாகன ஓட்டிகள், அங்கு சென்று பெட் ரோல், டீசல் போடுவதை பார்க்க முடியும். அதேபோல, வாடகைக்கு செல்லும் லாரிகளும் புதுவையில் டீசல்களை நிரப்பி வருவார்கள். தற்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என மக்கள் கூறி வருகிறார்கள். டீசல், பெட்ரோல் விலை ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டாலும் தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களை விட புதுவையில் குறைவுதான் என்பது கவனிக்கத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications