தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை - தடுமாறும் வாகன ஓட்டிகள்
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 92.25 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து 85.63 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: பெட்ரோல், டீசல், தொடர்ச்சியாக 11வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 92.25 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து 85.63 ரூபாய் ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் - டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பீகார் தேர்தலை முன்னிட்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் விலை உயர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில் பீகார் தேர்தல் முடிந்த உடன் நவம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயரத்தொடங்கியுள்ளது.
கடந்த 11வது நாளாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்றைய தினம் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 27 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 92 ரூபாய் 25 காசுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 32 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 85 ரூபாய் 63 காசுகள் ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் கிரீன் சிக்னல்! கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் எதிரொலிக்குமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications