பிஎஃப் அட்வான்ஸ் .. இந்த ஒரு டிரிக்ஸ் தான் ரொம்ப முக்கியம்.. வங்கி கணக்கில் பணம் லட்டு மாதிரி வரும்
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான இபிஎப்ஓவில் பணம் (pf money advance) எடுக்க முயற்சி செய்யும் பலருக்கும் இனி நிராகரிப்பு ஏற்படாது.. ஏனெனில் பெரும்பாலும் வங்கி கணக்கை ஆதாரமாக காட்டும் காசோலையை இணைக்க வேண்டியதிருந்தது. இப்போது காசோலை இணைக்க தேவையில்லை.. அதேநேரம் கிளைம் ரிஜெக்ட் ஆகாமல் இருக்க இந்த ஒரு விஷயத்தை சரியாக செய்தாலே பணம் உங்கள் அக்கவுண்டில் விழுந்துவிடும். அதுபற்றி பார்ப்போம்.
இ.பி.எப்.ஓ. எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த நிறுவனம் ஆகும். இதன்படி இந்தியாவில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணியாளர்களை கொண்ட நிறுவனங்கள் தொழிலாளரகளுக்கு கணிசமான பணத்தை ஒவ்வொரு மாதமும் பிடிக்க வேண்டும்.

விதி என்ன
அதே அளவு பணத்தை அந்நிறுவனங்களும் தர வேண்டும். இரண்டு தொகையையும் அவர்களுக்கு பிஎஃப் கணக்கு உருவாக்கி பணத்தை போட்டு வர வேண்டும். அந்த பணம் என்பது ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு அல்லது வேலையை விட்டு வெளியேறும் போது கிடைக்கும் சட்டப்பூர்வ பணபலன் உரிமையாகும். ஒருவேளை ஊழியர்கள் இறந்து போனால், அவர்களைச் சார்ந்தவர்கள் பலன் கிடைத்து வருகிறது.
வட்டி எவ்வளவு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் (EPFO திட்டம்) கீழ் முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் கணிசமான நிதியினை மாதம் மாதம் பங்களிப்பு தொகையை செலுத்துவதற்கு பிஎஃப் அமைப்பு வட்டி தருகிறது. இதற்கு 8 சதவீதத்திற்கு மேல் வட்டி வழங்கப்படுகிறது. ஒருவர் 10 வருடம் அல்லது 20 வருடம் வேலை பார்த்து பணத்தை சேர்த்து வைத்தால் மிகப்பெரிய தொகை இறுதியில் கிடைக்கும். 58 வயது வரை பணத்தை எடுக்காமல் இருந்தால் அவர்கள் வாழ்க்கையின் இறுதி காலம் பொற்காலமாக இருக்கும்.
செட்டில்மென்ட்
உங்களுக்கு 58 வயதை அடைந்தவுடன் பிஎப் பங்களிப்பில் உள்ள முழு தொகைகளையும் திரும்பப் பெறலாம் அல்லது பணியில் இருந்து ஓய்வு பெறும் போது பணியாளர் முழுமையான செட்டில்மென்ட் கோரி விண்ணப்பிக்க இயலும் அதேநேரம் வேலையில்லை என்றால் 2 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் பிஎப் பணத்தை முழுமையாக எடுக்க முடியும். இதேபோல் ஓய்வுபெறும் வயதை அடைவதற்கு முன் பணியில் இருக்கும் போது மரணம் ஏற்பட்டால், சட்டப்பூர்வ வாரிசுகள் அல்லது நாமினிக்கு முழுமையான செட்டில்மென்ட் வாங்கி கொள்ளலாம்.
மருத்துவ அவசரம்
அதேநேரம் மருத்துவ அவசரம், குழந்தைகளின் உயர் கல்வி, வீடு கட்டுவதற்கு, நிலம் வாங்குவதற்கு. திருமணத்திற்கு என ஏதாவது அவசர தேவைக்கு பிஎப்பில் அட்வான்ஸ் பணம் எடுக்கலாம். இதில் மருத்துவ அவசரத்திற்கு மட்டுமே ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுக்க முடியும். அதற்கு எந்த நிபந்தனையும் இல்லை... மற்ற காரணங்களுக்கு பணம் எடுக்க குறைந்தது ஐந்து வருடம் ஆனவர்களே பிஎப் கணக்கில் எடுக்க முடியும்.
பாஸ்புக்
அதேநேரம் மருத்துவ காரணங்களுக்காக அதாவது illness கேட்டகிரியில் பிஎப் அட்வான்ஸ் போகிறவர்கள் பார்ம் 31ஐ செலக்ட் செய்ய வேண்டும். அதில் illness என்பதை செலக்ட் செய்ய வேண்டும். இதில் பணம் எடுக்கும் முன்பு பாஸ்புக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். அந்த ஸ்டேட்மெண்டில் உங்கள் பங்களிப்பு தொகையில் மட்டுமே பணம் எடுக்க வேண்டும்.
பிஎஃப் அட்வான்ஸ்
உதாரணமாக உங்கள் பங்களிப்பு தொகை 60000 என்றால், அதில் பாதியான 30000க்குத்தான் பிஎப் அட்வான்ஸ் கோரிக்கை வைக்க வேண்டும். முழு பணத்தையோ அல்லது 70 சதவீதமோ அல்லது 60 சதவீதமோ கேட்டால் கூட பிஃஎப் கணக்கில் அட்வான்ஸ் பணம் எடுக்க முடியாது. 20 நாட்கள் கழித்து தான் நிராகரிக்கப்பட்டது தெரியும். எனவே பிஃஎப் கணக்கில் பணம் எடுக்கும் போது பணியாளர் பங்களிப்பில் 50 சதவீதத்திற்கு கீழ் தான் எடுக்க வேண்டும். இதுதான் இப்போது முக்கியமான விதியாகும்.
பெயர் சரியாக இருக்க வேண்டும்
அதேபோல் பிஎஃப் கணக்கில் பணம் எடுக்க பெயர் சரியாக இருக்க வேண்டும். பான் கார்டில் உள்ள பெயரும் ஆதார் கார்டில் உள்ள பெயரும் சரியாக இருக்க வேண்டும். பான் கார்டில் பெயரை மாற்ற முடியாது. ஆதாரில் தான் மாற்ற வேண்டும். அதாவது உங்கள் பெயர் பிஃஎப் கணக்கில் என்ன பெயர் மற்றும் இனிசியலுடன் இருக்கிறதோ அதேபோல் தான் பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு என எல்லாவற்றிலும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தை எடுக்க முடியாது.
நடப்பு அக்கவுண்ட்
அடுத்ததாக பிஎப் அக்கவுண்டை பொறுத்தவரை இப்போது நடப்பு நிறுவன கணக்கில் தான் அனைத்து பணமும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பணம் எடுக்க முடியும். பிஎஃப் கிளைம் செய்வோர் அதற்கு முன்னதாக நடப்பு நிறுவன கணக்கிற்கு எல்லா பணத்தையும் மாற்ற வேண்டும். அதற்கு15 நாட்கள் வரை ஆகும். அதன்பிறகு உங்கள் கணக்கில் உள்ளதை பார்த்து விண்ணப்பியுங்கள்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications