பாகிஸ்தானுக்கு தமிழகம் கொடுத்த மிக பெரிய அடி! இன்னும் கொஞ்ச நாள் தாக்குப்பிடிப்பதே கஷ்டம் தானாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் மருந்துகளை நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதற்கேற்பத் தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் மருந்துகள் மட்டுமின்றி மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்தியாவும் தக்கப் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எல்லையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.

Pharmaceutical export to Pakistan from Tamil nadu has been stopped

இது ஒரு பக்கம் இருக்க பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை நிறுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது

மருந்துகள் நிறுத்தம்

இதற்கிடையே தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் மருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மருந்து உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவர் டாக்டர் ஜெயசீலன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். தேச நலனைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானுக்கான மருந்துகள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சர்வதேச அளவில் பார்த்தோம் என்றால் இந்தியாவில் மருந்து சந்தை மிகப் பெரியது. உலகில் ஒட்டுமொத்த மருந்துகள் உற்பத்தியில் பாதிக்கும் மேல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் உள்நாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

10 ஆயிரம் கோடி

அதிலும் குறிப்பாக ஜெனரிக் மருந்துகளை நாம் அதிகளவில் ஏற்றுமதி செய்கிறோம். ஜெனரிக் மருந்துகள் மற்றும் அதற்கான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.2.40 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகளை நாம் ஏற்றுமதி செய்கிறோம். அதில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.10,000 கோடி வரையிலான மருந்துகளை ஏற்றுமதி செய்கிறோம்.

நிறுத்தம்

தமிழ்நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு உயிர் காக்கும் மருந்துகள் உட்படப் பல மருந்துகள் செல்கிறது. மருந்துகள் மட்டுமின்றி மருந்துகளுக்கான மூலப்பொருள்களையும் இங்கிருந்து அனுப்பி வருகிறோம். இதன் மொத்த வா்த்தக மதிப்பு ரூ.100 கோடியாகும். இப்போது நிலவும் சூழல் காரணமாக, மத்திய அரசின் அறிவுறுத்தல்படி பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் மருந்துகளை நிறுத்தியுள்ளோம். தேச நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு மருந்து மட்டுமின்றி மூலப்பொருள் ஏற்றுமதியையும் நிறுத்தியிருக்கிறோம். இதனால் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படலாம்.

தமிழ்நாட்டில் மருந்து பிரச்சினை இல்லை

இருப்பினும், மறு அறிவிப்பு வரும் வரை ஏற்றுமதி செய்யப்போவதில்லை. அதேநேரம் மற்ற நாடுகளுக்கான மருந்து ஏற்றுமதி தொடரும்.. அதில் எந்தவொரு பாதிப்பும் இல்லை.. இந்தியா பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா உட்படப் பல நாடுகள் கூடுதல் மருந்துகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன.

அதேநேரம் இந்தச் சூழலால் தமிழகத்தில் மருந்து உற்பத்தியில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. நாம் சில மூலப்பொருட்களைச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில், அதில் எந்தவொரு சிக்கலும் இல்லை. போர்ச் சூழல் அதிகரித்தாலும் மருந்து தட்டுப்பாடு வர எந்தவொரு வாய்ப்பும் இல்லை" என்றார்.

கொஞ்ச நாள்தான்

பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் மருந்துகளைத் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களும் நிறுத்திவிட்டன. இதனால் பாகிஸ்தானில் மருந்துகளுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய கையிருப்பை வைத்து சில காலம் மட்டுமே பாகிஸ்தானால் தாங்க முடியும் எனத் தெரிகிறது! அதற்குள் வேறு நாடுகளிடம் இருந்து மருந்துகளை வாங்க பாக். ஏற்படு செய்யவில்லை என்றால் பெரிய தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+