PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ரேசனில் பொருள் வாங்கலையா? உடனே ’இதை’ பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில், முன்னுரிமை ரேஷன் அட்டை, முன்னுரிமை ரேஷன் கார்டு, அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு, பொருளில்லா ரேசன் அட்டை உள்ளிட்ட ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த நிலையில் ரேசன் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்க விருப்பம் இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் அதனை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது வெறும் உணவு பொருட்கள் வாங்கும் அட்டையாக மட்டும் இல்லாமல், பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு அடிப்படை அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது. இதன் மூலம் அரசு வழங்கும் விலையில்லா உணவுப் பொருட்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு நலன்கள் மக்களிடம் சென்று சேர்கின்றன.

தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சம் குடும்ப அட்டைகள் செயலில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 7 கோடியே 46 லட்சம் மக்கள் நன்மை பெறுகின்றனர். தற்போதைய டிஜிட்டல் மாற்றத்தால் இவை அனைத்தும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாறியுள்ளன.

PHH AAY Ration Card Holders Alert

ரேஷன் அட்டை

அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்கள் மாதந்தோறும் 35 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களை பெறுகின்றனர். மற்ற சாதாரண குடும்ப அட்டையாளர் 20 கிலோ அரிசி பெறுகின்றனர். ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்களின் அளவு மாறுபடும்.

பொருளில்லா அட்டை

இந்நிலையில், சமீபத்தில் ரேஷன் கார்டு வகையை மாற்றுவது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பொருளில்லா அட்டை (NPHH-NC) வைத்திருப்பவர்கள் இனி நியாய விலைக் கடைகளில் எந்தவிதமான பொருள்களையும் பெற முடியாது. மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க விருப்பமில்லாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களது உரிமையை விட்டுக் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விட்டுக்கொடுக்கும் அட்டைகள் "பொருளில்லா குடும்ப அட்டை" வகையாக மாற்றப்படும்

குடும்ப அட்டை மாற்றம்

தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 வகையான ரேஷன் அட்டைகள் செயல்படுகின்றன. முன்னுரிமையற்ற குடும்ப அட்டை, முன்னுரிமை குடும்ப அட்டை, சர்க்கரை விருப்ப அட்டை, அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை, மற்றும் பொருளில்லா அட்டை (NPHH-NC). ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை, வருமானம், உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த அட்டை வகைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

நியாய விலைக் கடை

இதுதொடர்பாக திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தமிழ்நாட்டில் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை, முன்னுரிமை குடும்ப அட்டை, சர்க்கரை விருப்ப அட்டை, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் பொருளில்லா அட்டை என 5 வகையான ரேஷன் அட்டைகள் செயலில் உள்ளன. குடும்பங்களின் பொருளாதார நிலையைப் பொறுத்து தான் அட்டை வகை தீர்மானிக்கப்படுகிறது. இவற்றில் பொருளில்லா அட்டை (NPHH-NC) வைத்திருப்பவர்கள் நியாய விலைக் கடைகளில் எந்தப் பொருளையும் வாங்க முடியாது.

TNPDS இணையதளம்

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் விட்டுக் கொடுக்கலாம். மேற்படி குடும்ப அட்டைதாரர்கள் தங்களது உரிமத்தினை விட்டுக் கொடுக்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணைய முகவரி மூலம் (www.tnpds.gov.in) மூலமாக தங்களது குடும்ப அட்டையாக (NPHH-NC) துறை அட்டையினை பொருளில்லா குடும்ப மாற்றிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் தெரிவித்துள்ளார்." என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+