சென்னை மக்களே நோட் பண்ணுங்க.. நாளை முதல் 2 நாள் 20 ஏரியாவில் குடிநீர் விநியோகம் ரத்து - CMWSSB
சென்னை: சென்னையில் நாளை (நவம்பர் 20) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 21) ஆகிய 2 நாட்கள் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் உள்ளிட்ட மண்டலங்களில் இருக்கும் 20 முக்கிய இடங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படாது என்று சென்னை மெட்ரோபாலிட்டன் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சென்னை மெட்ரோபாலிட்டன் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் (CMWSSB) சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சில சமயங்களில் பராமரிப்பு பணி, பவர் கட் உள்ளிட்ட விஷயங்களால் இந்த குடிநீர் விநியோகம் என்பது பாதிக்கப்படும். அந்த வகையில் நாளை காலை முதல் நாளை மறுநாள் காலை வரை 20 ஏரியாக்களில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோபாலிட்டன் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛சென்னை உத்தமர் காந்தி ரோடு மற்றும் சேமியர்ஸ் சாலை இடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பைப்லைன் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னை வள்ளுவர் கோட்டம் குடிநீர் வினியோக மையம் 24 மணிநேரம் செயல்படாது.
இதன் காரணமாக தேனாம்பேட்டை (மண்டலம் 9), கோடம்பாக்கம் (மண்டலம் 10), அடையார் (மண்டலம் 13) உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 20 முக்கிய இடங்களில் நவம்பர் 20 (நாளை), நவம்பர் 21 (நாளை மறுநாள்) என 2 நாட்கள் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட உள்ளது.
அதன்படி தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார், சூளைமேடு,நுங்கம்பாக்கம், சேத்துப்பேட்டை, ஆயிரம் விளக்கும், ராயப்பேட்டை, கோபாலபுரம், ஆழ்வார்பேட்டை, நந்தனம், மேற்கு மாம்பலம், மேற்கு சிஐடி நகர், சைதாப்பேட்டையின் சில பகுதிகள், அசோக் நகர், டி நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 20ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் நவ்பம்ர 21ம் தேதி காலை 6 மணி வரை குடிநீர் வினியோகம் செய்யப்படாது.
இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை முன்னெச்சரிக்கையாக சேமித்து வைத்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவசர தேவைகள் இருப்பின் டேங்கர்கள் மூலம் குடிநீர் பெற்று கொள்ளலாம். டேங்கரை சென்னை மெட்ரோபாலிட்டர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் இணையதளமான https://cmwssb.tn.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஏதாவது விபரங்கள் தேவை என்றால் 044 - 4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications