Piyush Goyal: ஜாக்கிரதை! விஜய் ஒரு Game Spoiler-னு சொன்ன பியூஷ் கோயல்? ரைமிங்கா பேசிய தமிழிசை!
சென்னை: சென்னையில் பாஜக மையக் குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்யை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் Game Spoiler என அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களை விட குறைவான நாட்களே உள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் பிரச்சாரம், கூட்டணி பேரம், தொகுதி பங்கீடு என அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு சென்றுள்ளன.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக மீண்டும் இணைந்துள்ள நிலையில் மேலும் சில கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.
அது போல் இணை பொறுப்பாளர்களாக இணையமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மொஹோல் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை வந்த பியூஸ் கோயலை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சென்னையில் பாஜக நிர்வாகிகளின் மையக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சவுந்திரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர், எஸ்.ஆர்.சேகர், விஜயதாரணி உள்ளிட்டோருடன் பியூஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பியூஷ் கோயல் விஜய் குறித்தும் தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசியதாக தெரிகிறது. அதாவது விஜய்யை Game Spoiler (ஆட்டக்குலைப்பர்) என பியூஷ் கோயல் அழைத்தாராம்.
தவெக வாக்குகளால் என்டிஏ கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பணியாற்ற வேண்டும் என கோயல் அறிவுரை வழங்கினாராம்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் சந்தித்து பேசினார். அவர் தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதை நயினார் நாகேந்திரன் மறுத்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், பியூஷ் கோயல் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்தார். தற்போது மீண்டும் அவரே நியமிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு தமிழக சூழல்கள் நன்றாக தெரியும்.
எடப்பாடி பழனிசாமியுடன் இலகுவாக பழகக் கூடியவர். பியூஷ் கோயலின் வியூகங்கள் பாஜகவுக்கும் தேஜகூட்டணிக்கும் வெற்றியை தரும். எத்தனை தொகுதிகள் என்பதை தேசிய பாஜக தலைமையும் அதிமுக தலைமையும்தான் முடிவு செய்யும்.
திமுகவை தோற்கடிக்க விஜய் தனித்து போட்டியிட்டால் முடியாது என்பதால்தான் என்டிஏ கூட்டணிக்கு அழைத்தேன். விஜய் குறித்தும் இன்று ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது. அப்போது விஜய்யை ஸ்பாய்லர் என யாரும் அழைக்கவில்லை. அது போல் அவர் ஸ்பாய்லரும் இல்லை, பாய்லரும் இல்லை என தமிழிசை நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications