எடப்பாடி வீட்டிற்கே நேராக சென்ற பியூஷ் கோயல்.. சற்று நேரத்தில் வெளியாகும் மிக முக்கிய அறிவிப்பு?
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே இன்னும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி காலை விருந்தளிக்கிறார். இதில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு உட்பட 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் 2, 3 வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்குவதால் அதற்கான நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக ஆளும் திமுகவுக்கு எதிராக வலிமையான ஒரு கூட்டணியை அமைக்கும் முனைப்பில் அதிமுக- பாஜக இருக்கிறது.

கூட்டணி
அதிமுக பாஜக கூட்டணி கடந்தாண்டே உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்ற கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டன. முதலில் அன்புமணி இந்த கூட்டணியில் இணைவதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். தொடர்ந்து பாரிவேந்தர் தலைமையிலான ஐஜேகே கட்சியும் கூட்டணியில் இணைந்தது.
டிடிவி தினகரன்
இதற்கிடையே தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியில் முக்கியமான கட்சி இணையவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் அறிவித்தார். இன்னும் ஓரிரு நாட்களில் முக்கிய கட்சி இணையும் என்று பழனிசாமி அறிவித்திருந்தார். அப்போதே டிடிவி தினகரன் தான் மீண்டும் என்டிஏ கூட்டணியில் சேரப் போவதாகச் சொல்லப்பட்டது. அதை நேற்று டிடிவி தினகரன் உறுதி செய்தார். தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் நல்லாட்சியைக் கொடுக்க பழைய கசப்புகளைத் தாண்டி கூட்டணியை அமைத்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
நாளைய தினம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து என்டிஏ கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மேடை ஏற்ற பாஜக முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே அடுத்தடுத்து கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளைக் கவனிக்கவே மத்திய அமைச்சரும் பாஜக மேலிடத் தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழ்நாடு வந்துள்ளார். அவர் வந்த பிறகே என்டிஏ கூட்டணியில் அமமுக வருவதை டிடிவி தினகரன் உறுதி செய்தார்.
எடப்பாடி பழனிசாமி இல்லம்
இதற்கிடையே இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பியூஷ் கோயல் சென்றார். 3 நாள் பயணமாகத் தமிழ்நாடு வந்துள்ள பியூஷ் கோயல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். அவர் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு அவருக்கு எடப்பாடி பழனிசாமி காலை விருந்து அளிக்கிறார். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்..
முக்கிய ஆலோசனை
கூட்டணி இறுதியாகவிட்ட நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்தே பாஜக இடங்களைப் பெறும் எனச் சொல்லப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி நிகழ்ச்சி நாளை நடக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிப்பார்கள் எனத் தெரிகிறது.
-
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications