அடுத்த "பிரதமர்" ராகுல் காந்தி?.. கை கொடுக்குமா "மோடி" உத்தி.. பிகேவின் என்ட்ரி.. தலைநகரில் பரபரப்பு
ராகுல் காந்தி பிரதமராக வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: மொத்தம் 2 விஷயங்கள் அரசியல் களத்தில் தகதகவென கொதித்து கொண்டிருக்கிறது.. காரணம் பிரசாந்த் கிஷோர் அடுத்த ரவுண்டு அதிரடிக்கு தயாராகிவிட்டார்.
Recommended Video
2017-ல் காங்கிரஸ் தோற்றதுமே அநேகமாக பிகே பக்கம் அந்த கட்சி திரும்பி கூட பார்க்காது என்று கணிக்கப்பட்டது.. ஆனால், இது அரசியல் ஆயிற்றே.. அப்படி எல்லாம் யாரையும் நிரந்தரமாக எதிரியாகவும், நண்பராகவும் கருதிவிட முடியாது.
அந்த வகையில்தான் பிகே மறுபடியும் கதர் கட்சி பக்கம் ஆதரவு காட்டி உள்ளார்... நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, வெற்றி பெற்ற தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் வாழ்த்து சொன்னார்.. அதோடு சரி இவரை காணோம்.

சரத்பவார்
பிறகு திடீரென சரத்பவாரை சென்று சந்திக்கவும்தான், தேசிய அரசியல் சூடுபிடித்தது.. மிகுந்த கவனத்தை அந்த சந்திப்பு ஈர்த்தது.. இனிமேல் தேர்தல் ஆலோசகராக இருக்கமாட்டேன் என்று டாடா காட்டிவிட்டு போனவரின் சரத்பவாருடனான சந்திப்பு , அவருடைய பணியை அவர் தொடர்வதற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டது. ஆனால், இவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை..

வியூகம்
பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத 3வது அணி இல்லை என்றும் தெளிவுபடுத்தி இருந்தார்.. அநேகமாக உபியில் நடக்க போகும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் அமைத்து செயல்பட உள்ளதாக தெரிகிறது. அப்படியானால், 2024-ல் நடைபெறவிருக்கும் எம்பி தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக-வை மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான வலுவான கூட்டணியை பிகே களம் அமைக்க தயாராகவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

ராகுல்காந்தி
இப்படிப்பட்ட சூழலில்தான் ராகுல் குறித்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. 2 வருடமாகவே, காங்கிரஸ் பொறுப்பை இவர் ஏற்காமல் ஒதுங்கி வருகிறார்.. மூத்த தலைவர்கள் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறார்கள்.. சோனியாவுக்கும் உடம்பு சரியில்லை.. ஒரு தேசிய கட்சி 3 வருஷமாக தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது.. இன்னொரு பக்கம் இது பாஜகவுக்கு தெம்பை தந்து வருகிறது.

சந்திப்பு
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர், ராகுலை எதற்காக சந்தித்து பேசியிருப்பார்? என்ற ஆவலும் எழுகிறது.. இது குடும்ப ரீதியான சந்திப்பு என்றும் சொல்ல முடியாது.. காரணம், சிலமூத்த காங்கிரஸ் தலைவர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.. இதை பற்றி கட்சியும் எதுவும் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஒன்று, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி அடுத்த வருடம் பஞ்சாப் தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க ஏதாவது பேசப்பட்டிருக்கலாம்.. அல்லது உபி தேர்தலில் ஆட்சியை பிடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

பிளான்
இதைதவிர, இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெற வைத்து, அதன்மூலம் ராகுல்காந்தியை பிரதமராக்க பிகே பிளான் செய்திருப்பதாகவும் தெரிகிறது.. இதை மேலோட்டமாக பார்த்தால் நம்பகத்தன்மை இல்லாவிட்டாலும், பிகேவின் உத்திகளால்தான் மோடிக்கே சிம்மாசனம் கிடைத்தது.. அவரை முதல் முறையாக பிரதமராக்கியது... பிகேவால் உயர்வு பெற்ற மாநில கட்சிகள் எத்தனையோ இருக்கின்றன.. ஜெகன் மோகன் ரெட்டி, மு.க.ஸ்டாலின், மமதா என இந்த லிஸ்ட் பெரியது.

முயற்சி
"மோடி" என்ற மாடலை உருவாக்கியவரே பிகேதான். அந்த வகையில்தான் ராகுலையும் வைத்து பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது.. மோடிக்கு அடுத்து இப்போது இன்னொரு பிரதமரை உருவாக்கும் முயற்சியில் பிகே களம் குதித்துள்ளார் என்றும், தான் உருவாக்கிய மோடியை தானே கீழே இறக்க முடிவு செய்து விட்டார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரங்கள்
மிகப் பெரிய அளவிலான விளம்பரங்கள் மூலமாகத்தான் பாஜகவால் மக்களிடையே வேகமாக நெருங்க முடிந்தது. மோடியை மக்கள் மனதில் ஏற்றி அமர வைத்ததில் பிகேவின் பங்கு அதிகம். பல வருடமாக மோடியை வீழ்த்த முடியாமல் காங்கிரஸ் திணறுகிறது. குறிப்பாக ராகுல் காந்தியால் எதுவுமே செய்ய முடியவில்லை. இந்த நிலையில் மோடியை எதிர்க்க பிகே கை கொடுத்தால் அது நிச்சயம் காங்கிரஸுக்கும், ராகுல் காந்திக்கும் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஸ்டாலின்
ஆனாலும் இதில் இன்னொரு சிக்கலும் எழுகிறது.. பிகேவால் முதல்வரானவர்கள் பல மாநிலங்களில் இருக்கிறார்கள்.. மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின் போன்றோர் இருக்கும் நிலையில். இத்தனை பேரையும் கூட்டு சேர்த்து கொண்டு காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வென்றால், ஒரு வேளை பெரும்பான்மை கிடைக்காமல் போனால் பல பிரதமர் வேட்பாளர்கள் தலையெடுத்து தலைவலி கொடுக்கும் வாய்ப்பும் உள்ளது. அதை எப்படி பிகே சமாளிப்பார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியதாகும்.. பிகேவின் ரீ-என்ட்ரியால் என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications