இனி ஆதார் கார்டு எடுக்க UIDAI புது ரூல்ஸ்.. ரூ.75 PVC கட்டணம்.. ஆதார் பிளாஸ்டிக் அட்டை விலை உயர்வு
சென்னை: ஆதார் அட்டைதாரர்களுக்கு UIDAI ஒரு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஆதார் PVC அட்டைக்கான சேவை கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது.. இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டணங்களில் வரிகள் மற்றும் விநியோகக் கட்டணங்கள் அடங்கும். இந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டையை எப்படி ஆர்டர் செய்வது? வெளியான அறிவிப்புகள் என்னென்ன? சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. பள்ளி சேர்க்கை முதல் வங்கி கணக்கு தொடங்குவது, அரசு நலத்திட்டங்கள் பெறுவது, மொபைல் சிம் வாங்குவது வரை பல்வேறு தேவைகளுக்கும் ஆதார் எண்ணே முதன்மையாக கேட்கப்படுகிறது.

12 இலக்க எண்கள்
12 இலக்கங்களை கொண்ட இந்த ஆதார் அட்டையை எளிதாக எடுத்துச் செல்ல வசதியாக, பிவிசி எனப்படும் பிளாஸ்டிக் ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகம் செய்தது.
இந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டை கிரெடிட் கார்டு அளவில் இருப்பதால், நீடித்து பயன்படுத்தக்கூடியதாகவும் எளிதில் கையாளக்கூடியதாகவும் உள்ளது.
ஆதார் கார்டு கட்டணம் ரூல்ஸ்
இந்த PVC ஆதார் அட்டையை UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது mAadhaar மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதற்காக இதுவரை 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இந்த கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் PVC ஆதார் அட்டைக்கான சேவைக் கட்டணம் 75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணத்தில் வரி மற்றும் டெலிவரி செலவு அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன.
PVC ஆதார் அட்டை புதிய கட்டணம்
கடந்த 2020ம் ஆண்டில் இந்த சேவை தொடங்கப்பட்ட பிறகு முதல்முறையாக இப்போதுதான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. PVC ஆதார் அட்டையின் உற்பத்தி, அச்சிடுதல், பாதுகாப்பான விநியோகம் மற்றும் லாஜிஸ்டிக் செலவுகள் கடந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளதால், சேவையின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்தும் நோக்கில் இந்த கட்டண மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக UIDAI விளக்கம் அளித்துள்ளது.
இ-ஆதார் மற்றும் காகித ஆதார் போலவே PVC ஆதாரும் முழுமையாக செல்லுபடியாகும் ஆவணமாகவே கருதப்படுகிறது.
ஆதார் PVC அட்டை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டு அளவுள்ள ஒரு பாக்கெட் அளவு ஆதார் அட்டையாகும். இது காகித அட்டைகளை விட நீடித்து உழைக்கக் கூடியது.. முக்கியமாக இதை எடுத்து செல்ல எளிதானது. இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
பிளாஸ்டிக் கார்டு
இந்த PVC அட்டையின் மதிப்பு வழக்கமான ஆதார் கடிதம் மற்றும் இ-ஆதார் ஆவணத்தின் மதிப்புக்கு சமமானது... PVC ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தால், விண்ணப்பதாரரின் முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
சில இடங்களில் 5 பணிநாட்களுக்குள் டெலிவரி செய்யப்படுவதாகவும், சில சமயங்களில் 15 முதல் 30 நாட்களுக்குள் கிடைக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே PVC ஆதார் அட்டையை பெற விரும்பும் பொதுமக்கள், இனி ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது 75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மொபைல் போனில் எப்படி ஆர்டர் செய்வது
இந்த ஆதார் PVC அட்டைகளை பெற வேண்டுமானால், செல்போனிலேயே mAaadhaar செயலியை டவுன்லோடு செய்து அதில் லாகின் செய்ய வேண்டும்.
அந்த செயலியில் PVC ஆதார் கார்டை ஆர்டர் செய்யும் ஆப்ஷனும் இருக்கும். அதிலேயே பணம் செலுத்தும் வசதியும் உள்ளதால், இதனை எளிதாக பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுடைய PVC ஆதார் கார்டை ஆர்டர் செய்து கொள்ளலாம்.. ஆர்டர் செய்தவுடன் 15 முதல் 30 நாட்களில் வீடு தேடி கார்டு டெலிவரி செய்யப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications