சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலினை ஞாயிறுகளில் தொந்தரவு செய்யக்கூடாது.. அபத்தமான மனு.. நீதிபதிகள் கடும்கோபம்.. அளித்த தண்டனை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அசாதாரண சூழ்நிலைகளை தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தவருக்க 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படிப்பட்ட அபத்தமான வழக்குகளை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கொரனோ இரண்டாவது அலையின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. இந்த பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சளைக்காமல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தொடர்ச்சியாக ஆய்வுக்கூட்டங்களை நடத்துவது, சுற்றுப்பயணம் செல்வது என்று சுழன்று கொண்டிருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய உடல்நலனையும் கவனத்தில் கொள்ளாமல், கடந்த மே 30ம் தேதி ஞாயிற்று கிழமை கோவையில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக முழுக்கவச உடையணிந்து கொரனோ வார்டிற்கு சென்றுள்ளார்.

ஸ்டாலினுக்கு தொந்தரவு

ஸ்டாலினுக்கு தொந்தரவு

தமிழக மக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறை உள்ளதுபோல, முதல்வரின் நலனிலும் அனைவருக்கும் அக்கறை உள்ளது. எனவே, தமிழ்நாடு முதல்வரை அசாதாரண சூழ்நிலைகளை தவிர ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என்று தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

நீதிமன்றம் கோபம்

நீதிமன்றம் கோபம்

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

10ஆயிரம் அபராதம்

10ஆயிரம் அபராதம்

இதுபோன்ற அபத்தமான வழக்குகளை தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இதுபோன்ற வழக்கை தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததால் மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

ஓராண்டிற்கு தடை

ஓராண்டிற்கு தடை

இந்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும். மேலும், நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் ஓராண்டிற்கு மனுதாரர் பொதுநல வழக்கு தொடர தடைவிதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

English summary
Plea Seeking Directions To Officials Not To Disturb Chief Minister mk stalin On Sundays: Madras High Court Dismisses Plea With 10K Cost
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X