பிளஸ் 1 பொதுத் தோ்வு: விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்.. முக்கிய அறிவிப்பு
சென்னை: மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதமும், மாணவிகள் 95.13 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

97.8 சதவீதம் பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடத்தையும், ஈரோடு 97 சதவீதமும், விருதுநகர் 96.2 சதவீதமும், கோவை 95.8 சதவீதமும், தூத்துக்குடி 95.1 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்றன. பொதுவாக மதிப்பெண் குறைவாகப் பெற்ற மாணவ, மாணவிகள் அல்லது எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லை என்று கருதும் மாணவ, மாணவிகள் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.
அந்த வகையில், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தோ்வில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களது விடைத்தாள் நகலினை செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று தோ்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளாம்.
இதையடுத்து, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதளத்தில் மறுகூட்டல், மறுமதிப்பீடு என்ற தலைப்பை கிளிக் செய்து வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தோ்வா்கள் இந்த விண்ணப்பத்தை பூா்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஜூன் 11-ஆம் தேதி நண்பகல் 12 முதல், 13-ஆம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீட்டுக்கு கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 505 செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ. 305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 205 கட்டணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications