பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியாகும்.. அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!
சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 14ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 8.25 லட்சம் பேர் எழுதினர். இதில் 7,534 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 20,207 மாணவர்கள், 5,000 தனித் தேர்வர்கள் மற்றும் 187 சிறை கைதிகளும் அடங்குவர்.

ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெற்றது. இதையடுத்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) தேர்வு எழுதிய தேர்வர்களின் முடிவுகள் வரும் மே 14 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட உள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியிடப்பட்டன. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியிடப்பட்டன. அதன்படி, 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் 14ஆம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications