அண்ணாமலைக்கு விபரீத ராஜயோகம்.. குபேர ஜாதகம்.. 2038ல் பிரதமர் வேட்பாளர்.. உறுதியாக சொல்லும் ஜோதிடர்
சென்னை: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ஜாதகப்படி அவருக்கு மத்திய அமைச்சராகும் யோகம் உள்ளது என்றும் பிரதமர் வேட்பாளராகும் தகுதி 99 சதவிகிதம் உள்ளது என்றும் ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ராசி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம். சிம்ம லக்னம். அவர் கடந்த ஓராண்டு காலமாகவே பேசும் வார்த்தைகளை கவனித்தாலே தெரியும். கூட்டணி கட்சியினரை பற்றி மட்டுமல்லாது ஆளும் கட்சியை பற்றி பேசியும் வழக்கு விவகாரங்களில் சிக்கியுள்ளார். அண்ணாமலை பேசும் வார்த்தைகள் எல்லாமே ஏதாவது ஒரு பிரச்சினையில்தான் முடிகிறது.

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல்வாதிகளுக்கு எப்படி இருக்கிறது என்று ஜோதிடர்கள் கணித்து கூறியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எப்படி இருக்கிறது என்று ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார் அண்ணாமலை. தற்போது தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில்தான் அண்ணாமலை லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியல்வாதிகளின் ஜாதகம் பற்றி கணித்து கூறி வரும் ஜோதிடர்கள் பலரும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஜாதகத்தை கணித்துள்ளனர்.
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனி இரண்டரை ஆண்டுகள் நடைபெறும். 2026ஆம் ஆண்டு வரைக்கும் அஷ்டம சனிதான். 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு சனி 9, 10,11ஆம் இடங்களில் நடைபெறும். அண்ணாமலைக்கும் அஷ்டம சனிதான் தற்போது நடைபெற உள்ளது.
இன்னும் பத்து ஆண்டுகளில் அண்ணாமலையின் அரசியல்வாழ்க்கை உச்சத்திற்கு செல்லப்போகிறது என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள். அவரது ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் உள்ளது. அது எப்போது யாரை உயர்த்தி விடும் என்று தெரியாது. அண்ணாமலையின் ஜாதகம் குபேர ஜாதகம் என்பதால் எல்லாம் வெற்றிகரமாக நடைபெறும்.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து பிரபலமானவர். அரசியலில் நுழைந்த உடன் பாஜக மாநில தலைவர் பதவி கிடைத்தது. இரண்டரை ஆண்டுகளில் புகழ் பெற்றுள்ளார் என்றும் அந்த ஜோதிடர் கணித்துள்ளார். அதே நேரத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையோ, 2024 மட்டுமல்ல 2038 வரைக்குமே மோடிதான் பிரதமர் என்று கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் மோடிக்கான தேர்தல். மோடியை விட பிரதமர் வேட்பாளருக்கான தகுதி யாருக்கும் இல்லை என்று கூறியுள்ளார். தமிழகத்தில் அப்படி யாருக்காவது இருப்பதாக கூறினால் மக்கள் சிரிப்பார்கள். இந்த தேர்தலில் யாரெல்லாம் மோடியை ஏற்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். தமிழ்நாட்டில் எங்கு போட்டியிட்டாலும் மோடி அதிக வாக்குகளில் வெற்றி பெறுவோர். 2024 மட்டுமல்ல 2038 வரை மோடிதான் பிரதமர் என்றும் கூறியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications