பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிரடி.. இன்சூரன்ஸ் தேதி அவகாசம் நீட்டிப்பு..விஏஓ, விவசாயிகள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதுகுறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி, தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு இழப்பீடுகள் தரப்பட்டு வருகின்றன.. விவசாயிகள் காப்பீடு செய்த விளை நிலங்களில் இயற்கை பேரழிவு மற்றும் பிற அறிவிக்கப்பட்ட அபாயங்கள் காரணமாக பயிர் இழப்புகள் ஏற்படும்போது, விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.

vao

காப்பீட்டு தொகை: விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி, பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப, இந்த காப்பீட்டு தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட இடர்பாடுகளால், நெல் பயிர்களை விதைக்க முடியாதபோது, விஏஓவிடம் விதைப்பு சான்றிதழை பெற்று, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற முடியும்.. வங்கியில் பயிர் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ.36500 ஆகும்... இதன் பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.730 ஆகும்.

விண்ணப்பங்கள்: விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், காப்பீடு செய்யும்போது சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் போன்றவை சரிபார்த்து காப்பீடு செய்து, அதற்கான ரசீதையும் பெற வேண்டும்.

அந்தவகையில், தற்போது பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் செப்டம்பர் 15 முதல் நவம்பர் 15 வரை நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கு, விவசாயிகள் விஏஓக்களிடம் அடங்கல் பெற்று, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு பிரீமிய தொகையை கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதில், ஏக்கருக்கு ரூ.30,120 இழப்பீடு தொகையாக வழங்கப்பட உள்ளது. இதற்கான பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ.451.80 வீதம் செலுத்த வேண்டும்.

அவகாசம்: ஆனால், அந்த தொகையை அனைவராலும் செலுத்த முடியவில்லை. ஏனென்றால், தீபாவளி, ஆயுதபூஜை விடுமுறைகள் தொடர்ந்து வந்ததால் அலுவலகங்கள், தேசிய மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பிரீமியம் தொகையை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. பிரீமியம் தொகை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று விஏஓ மற்றும் விவசாயிகள் சங்கம், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

சிவகங்கை, ராமநாதபுரம், கடலுார், புதுக்கோட்டை போன்ற மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வைத்த கோரிக்கையின் விளைவாக மேற்கண்ட கலெக்டர்கள் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த கோரிக்கையையடுத்து, மாநில அரசு, மத்திய அரசிடம் ஆலோசனை செய்து, கால அவகாசம் வழங்குவது குறித்து முடிவு செய்யும் என்று, வேளாண்மை துறை அதிகாரிகள் தரப்பிலும் நம்பிக்கை தரப்பட்டிருந்தது.

தமிழக அரசு: கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்தக் கடிதத்துக்கு தற்போது மத்திய அரசு பதிலளித்திருக்கிறது.. இது குறித்து அரசுத் துறை வட்டாரங்கள் சொன்னதாவது:

"குரு நானக் ஜெயந்தி காரணமாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்திருந்தது. இதனால், பயிா்க் காப்பீட்டுக்கு கால அவகாசத்தை நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிடாத நிலை இருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. அதன்படி, பயிா்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவ. 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று அரசுத் துறையினா் தெரிவித்துள்ளனர்..

மகிழ்ச்சி - நன்றி: தமிழக அரசு எடுத்த முயற்சி காரணமாக கால அவகாச நீட்டிப்பு வழங்கிய மத்திய அரசுக்கு விவசாயிகளும், கிராம நிா்வாக சங்கத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனா். பயிர்க் காப்பீடு செய்வதற்கான இணைய இணைப்பு மீண்டும் மதியம் முதல் செயல்படத் தொடங்கியுள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+