பிஎம் கிஷான் திட்டம்.. இன்றைக்கு அக்கவுண்டுக்கே வரும் ரூ.2000! உடனே பேலன்ஸ் செக் பண்ணுங்க! வரலையா?
சென்னை: மத்திய அரசின் சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை தலா 2000 ரூபாய் என மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் விடுவித்துள்ளார். இதுவரை 19 தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள நிலையில், 20வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் தற்போது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
பாஜக அரசு அமைந்த பிறகு பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளும், மானியம், நிதி உதவி உள்ளிட்டவையும் ஜன் தன் வங்கி கணக்குகள் மூலமாக நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
முன்னதாக தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 ரூபாயை நான்கு மாத இடைவெளியில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி நேரடியாக தகுதியுள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வர வைக்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 19 தவணைகளாக விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் நிதி உதவி வரவு வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 19வது தவணை பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி 19ஆவது தவணை பிஎம் கிசான் நிதியை விடுவித்தார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 20வது தவணை நிதி உதவியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார். இன்று உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இன்று 11 மணியளவில் 20வது தவணையை பிரதமர் மோடி விடுவித்தார். இதன் மூலம் சுமார் 9 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.
பணம் பெறும் விவசாயிகள் பிஎம் கிசான் சம்மன் நிதியின் https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பயனாளிகளின் தங்கள் நிலையை அறியலாம். தொடர்ந்து உங்கள் ஆதார் எண் அல்லது பிஎம் கிசான் திட்ட எண்ணை கொடுத்தால் உங்களது தரவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் பிஎம் கிசான் மொபைல் அப்ளிகேஷன் மூலமும் பயனாளிகள் தங்கள் நிலையை அறிந்து கொள்ளலாம். கூகுள் பிளே ஸ்டோரில் பிஎம் கிசான் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து, ஆதார் எண் பதிவிட்டு ஓடிபி உள்ளீடு செய்தால் டேஷ் போர்டில் பயனாளிகள் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும் மற்ற விவரங்களையும் இந்த அப்ளிகேஷனை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயிகள் தங்கள் மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்றும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications