அக்கவுண்டுக்கு வரும் 2,000.. புத்தாண்டு பரிசாக மத்திய அரசின் சர்ப்ரைஸ்! PM Kisan 22வது தவணை எப்போது?
சென்னை: இந்திய விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் 22வது தவணை விரைவில் வர இருக்கிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த ரூ.2,000 தொகை பிப்ரவரி மாதத்தின் முதல் பாதிக்குள் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தாண்டை முன்னிட்டு விரைவில் இதுதொடர்பான அறிவிப்பில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
விவசாயிகள் நலனுக்காக 2019 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் ரூ.2,000 என விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இதுவரை 21 தவணைகளாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 20வது தவணை நிதியை பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்நிலையில் 22வது தவணை நிதி எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

பிஎம் கிசான் திட்டம்
அந்த வகையில், ரூ.2,000 தொகை பிப்ரவரி மாதத்தின் முதல் பாதிக்குள் வங்கி கணக்கில் வரலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், தவணை வரும் முன் விவசாயிகள் தங்கள் பெயர் பட்டியலில் சரியாக உள்ளதா, e-KYC முடித்திருக்கிறார்களா என்பதை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் e-KYC செய்யாதவர்களின் பெயர் நன்மை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தவணை பணம் தாமதமாகவோ அல்லது வராமலோ போகும் அபாயம் உள்ளது.
22வது தவணை ரூ2000
தங்களது பெயரில் விவசாய நிலம் வைத்திருக்கும் குடும்பம் என்றால் யாரும் இந்த திட்ட பயனாளராக இருக்கலாம். நில அளவு எவ்வளவு என்பது முக்கியமில்லை. முன்பு இரண்டு ஹெக்டேர் என நிபந்தனை இருந்தாலும், தற்போது சிறு, குறுச்சிறு விவசாயிகள் உட்பட எல்லா நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இந்த திட்டம் வழங்கப்படுகிறது. ஆனால் சிலர் இந்த திட்டத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளட்னர். அரசில் உயர் பதவி வகித்தவர்கள், எம்எல்ஏ, எம்பி, மேயர் போன்றவர்கள், வருமான வரி கட்டுபவர்கள், அரசு ஊழியர்கள் (கிளாஸ் IV தவிர), ஓய்வூதியம் ரூ.10,000-க்கு மேல் பெறுபவர்கள், டாக்டர், என்ஜினீயர், வக்கீல், சார்ட்டேட் அக்கவுண்டெண்ட் போன்ற தொழில்முறை நபர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்காது.
PM Kisan நிலை சரிபார்ப்பு
சரி விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற e-KYC எப்படி செய்யலாம்? எனப் பார்க்கலாம். விவசாயிகள் e-KYC செய்ய மூன்று வழிகள் உள்ளன. அதன்படி, ஓடிபி மூலம் இணையதளத்திலும், அருகிலுள்ள CSC மையத்தில் கைரேகை மூலமும், ஆதார் முக அடையாளம் மூலமும் e-KYC செய்யலாம். புதியவர்கள் அதிகாரப்பூர்வ தளமான pmkisan.gov.in-ல் சென்று புதிய பதிவு செய்து விவரங்களை நிரப்பினால் போதும். இவர்களுக்கு ஒவ்வொரு நான்கு மாதத்துக்கும் ரூ.2,000 என வருடத்திற்கு ரூ.6,000 நேரடி நிதி உதவியாக கிடைக்கும்.
தவணை வரவு தேதி
புத்தாண்டு பொங்கல் பரிசாக 22வது தவணை நிதியை வெளியிடும் தேதியை மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை விவசாயிகள் தங்கள் செல்போன் எண், KYC நிலை, வங்கி விவரங்களை சரிபார்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications