பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி.. இனி இவங்களுக்கு PM கிசான் கிடைக்காது.. திடீர்னு வந்த உத்தரவு
சென்னை: ஆதார் கார்டு குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின்கீழ் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் அதாவது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதான் மந்திரி கிசான்: இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதன் மூலம் எத்தனையோ விவசாயிகள் நாடு முழுவதும் பயன்பெற்று வருகின்றனர்.

அனைத்து விவசாயிகளும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் இந்த பலன்களை பெறலாம். ஆனால், இந்த பலனை பெற விரும்பினால், விவசாயிகளின் பிஎம் கிசான் கணக்குகளுடன் ஆதார் நம்பரையும் இணைக்க வேண்டும்.
ஆதாரை இணைத்தால்தான் தவணைத்தொகை கிடைக்கும்.. எனவே, இந்த திட்டத்தின் மூலம் பயிா் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் கொள்முதல் செய்வதற்காக தவணை உதவித் தொகை பெறுவதற்கான நில ஆவணங்கள், ஆதாா் எண் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் துறை அழைப்பு விடுத்தவாறே உள்ளது.
ஆதார் கார்டு: மற்றொருபுறம், பிஎம் கிசான் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளின் பெயர் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டும் வருகிறது... இதனால், பயனாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.
இந்த 3 வருடத்தில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையில் 63 சதவீதம் சரிந்துவிட்டதாம். அதுமட்டுமல்ல, விவசாயிகளின் கல்வியறிவின்மை காரணமாக, அரசு கேட்கும் தகவல்களை வெப்சைட்டில் அப்லோடு செய்ய முடியாமலும் இந்தப் பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
பிஎம் கிசான்: அதனால்தான், பிஎம் கிசான் திட்டத்தில் பெயர் நீக்கப்பட்ட பயனாளிகள் விரைவில் தங்களது கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யும்படி அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, பயனாளிகளின் கணக்கு விவரங்களை சரியாக இணைக்க வேண்டும்.. தவறாக இருந்தாலும், ஆதார் சரிபார்ப்பு முடிக்கப்படாமல் இருந்தால் ரூ.6000 நிதியுதவி கிடைக்காமல் போய்விடும்.

நம்முடைய கோவை மாவட்டத்திலும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் தங்கள் ஆதார் உடன் வங்கி கணக்கு இணைக்க வேண்டும என்று கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியிருக்கிறார்.
கோரிக்கை: இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்... அதில், "62,659 விவசாயிகள் பயன் பெற்று வருவதாகவும், இதில் 5817 விவசாயிகள் இதுவரை வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்கவில்லை. இவர்கள் உடனடியாக வங்கி கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கு இல்லாதவர்கள் இந்தியா பேமெண்ட் வங்கி மூலம் ஜீரோ பேலன்ஸ் அடிப்படையில் கணக்கு தொடங்கி அதில் ஆதாரை இணைக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications