வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிஎம் கிஸான் திட்டத்தின் 22-வது தவணைத் தொகை (Installment) நாடு முழுவதும் உள்ள சுமார் 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. மார்ச் 13-ம் தேதி அஸ்ஸாமின் குவஹாத்தியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இதற்கான பொத்தானை அழுத்த, 18,640 கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்கைச் சென்றடைந்தது.

PM கிசான் திட்டம் - முழு பின்னணி
PM கிசான் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வருமான ஆதரவு வழங்கப்படுகிறது. இந்தத் தொகை, தலா ரூ. 2,000 வீதம் மூன்று சம தவணைகளாகப் பிரிக்கப்பட்டு, நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, அரசு பல தவணைகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இப்போது, 2025-ல் எதிர்பார்க்கப்படும் 22வது தவணை 10 நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 47 லட்சம் பேருக்கு இந்த தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கணக்கில் அந்த 2,000 ரூபாய் வந்து சேர்ந்ததா? இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்? இதோ ஒரு குயிக் கைடு!பணம் வந்ததை செக் செய்வது எப்படி? (ஸ்டெப்-பை-ஸ்டெப்)
பேங்குக்கு ஓடிப் போய் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. கையில் இருக்கும் மொபைலிலேயே பார்த்துவிடலாம்:முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.முகப்புப் பக்கத்தில் இருக்கும் 'Know Your Status' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.அங்கு உங்கள் பதிவு எண் (Registration Number) மற்றும் திரையில் தோன்றும் கேப்ட்சா (Captcha) குறியீட்டை உள்ளிடவும்.
இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அதை டைப் செய்து சப்மிட் கொடுத்தால், உங்களின் தற்போதைய பேமெண்ட் ஸ்டேட்டஸ் தெரிந்துவிடும்.
டிப்ஸ்: ஒருவேளை பதிவு எண் தெரியவில்லை என்றால், அங்கேயே இருக்கும் 'Know Your Registration Number' மூலம் ஆதார் அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி அதைக் கண்டறியலாம்.உங்களுக்கு ஏன் பணம் வராமல் போயிருக்கலாம்?தகுதியிருந்தும் பணம் வரவில்லை என்றால், இந்த மூன்றில் ஏதோ ஒன்றுதான் காரணமாக இருக்கும்
e-KYC நிலுவை: இப்போது e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இன்னும் முடிக்கப்படவில்லை என்றால் பணம் வராது.
ஆதார் இணைப்பு: உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (Aadhaar Seeding).
நில விவரங்கள்: நில ஆவணங்கள் (Land Seeding) போர்ட்டலில் சரியாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கலாம்.
யார் எல்லாம் தகுதி?
மத்திய அரசின் இந்த நிதியுதவியைப் பெற சில முக்கியமான தகுதிகள் அவசியம்:
சிறு மற்றும் குறு விவசாயிகள்: சொந்தமாக சாகுபடி செய்யக்கூடிய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்கள்.
குடும்ப வரம்பு: கணவன், மனைவி மற்றும் மைனர் குழந்தைகள் - இவர்கள் மூவரும் சேர்ந்ததுதான் ஒரு 'குடும்பம்' எனக் கருதப்படுகிறது.
விலக்குகள்: அரசு ஊழியர்கள் (குரூப்-டி தவிர), வருமான வரி செலுத்துபவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் (ரூ.10,000-க்கு மேல்), மற்றும் டாக்டர்கள், வக்கீல்கள் போன்ற தொழில்முறை வல்லுநர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications