பிரதான் சூரிய மின்சக்தி திட்டத்தில் இலவச மின்சாரம்! 7.7 லட்சம் வீடுகளுக்கு மின்சார கட்டணம் இனி இல்லை
சென்னை: பிரதமரின் சூரிய மின்சக்தி வீடு திட்டமானது, பொதுமக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்று விளங்கி கொண்டிருக்கிறது.. மத்திய அரசின் "PM Surya Ghar என்று சொல்லப்படும் இந்த திட்டத்தில் மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றும் வெளியாகி உள்ளது. அது என்ன தெரியுமா?
மத்திய அரசின் இலவச சோலார் மின்சார திட்டம் கடந்த வருடம் பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.. பொதுமக்களின் மின்சார செலவை குறைத்து, பசுமை எரிசக்தியை ஊக்குவிக்க உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும்.

குடியிருப்பு வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்தகடுகள் நிறுவி, வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை நேரடியாக உற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ், வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்தகடுகள் அமைக்கப்பட்டு, மாதந்தோறும் தேவையான அளவு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இலவச சோலார் மின்சார திட்டம்
இதனால் மின்சாரக் கட்டணம் குறைவதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் அதிக பயன் அடைகின்றன. இந்தியாவை சுயசார்பு மின்சக்தி நாடாக மாற்றும் நோக்கிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த சூரிய மின்சக்தி இலவச மின்சாரத் திட்டம், நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், இதுவரை 7.7 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின்சாரக் கட்டணம் செலுத்தாமல் பயன்பெற்று வருகின்றன.
மின்சார சேமிப்பு
வரக்கூடிய 2026-27 நிதியாண்டிற்குள் ரூ.75,021 கோடி செலவில் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்தகடுகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவை குறைப்பதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு இந்த திட்டம் பற்றின சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.. அதாவது, கடந்த 9ம் தேதி நிலவரப்படி, இந்தியா முழுவதும் 19,45,758 வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் பயனாக 24,35,196 குடும்பங்கள் மின்சார சேமிப்பையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அனுபவித்து வருகின்றன.
தமிழகத்தில் சூரிய மின்தகடுகள்
தமிழகத்தில் மட்டும் 48,652 வீடுகளில் இந்த திட்டத்தின் கீழ் சூரிய மின்தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2,066 வீடுகள் இதன் பயனை பெற்றுள்ளன.
கிராமப்புற பகுதிகளிலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களும் இந்த திட்டத்தை எளிதாக பயன்படுத்தும் வகையில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் கூடுதல் வழிகாட்டுதல்கள் மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.
பசுமை எரிசக்தி
இதற்கிடையில், இந்தியாவை பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாற்றும் நோக்கில், தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், 2030ம் வருடத்துக்குள் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பசுமை ஹைட்ரஜனின் விலையை குறைக்கவும், அதன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரிவுபடுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சூரிய மின்சக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், உள்நாட்டிலேயே உற்பத்தி திறனை உயர்த்தவும், ரூ.83.19 கோடி மதிப்பிலான "பெரோவ்ஸ்கைட் டேன்டெம் சூரிய மின்கலங்களின் மேம்பாடு" என்ற ஆராய்ச்சி திட்டத்திற்கும் மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. இத்தகைய முயற்சிகள் மூலம், இந்தியா பசுமை எரிசக்தியில் முன்னணி நாடாக மாறும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளது
சபாஷ் மத்திய அரசு
இதில், பெரோவ்ஸ்கைட் என்பது என்ன தெரியுமா? சூரிய ஒளியை மிகச் சிறப்பாக உறிஞ்சக்கூடிய ஒரு பொளுக்குதான் பெரோவ்ஸ்கைட் என்பார்கள்.. டேன்டெம் என்பது இரண்டு விதமான மின்கலங்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி பயன்படுத்துவதாகும்.. அதாவது, ஒரே சூரிய மின்தகட்டில் கீழே பழைய சிலிக்கான் மின்கலம், மேலே புதிய பெரோவ்ஸ்கைட் மின்கலம் என இரண்டையும் சேர்த்து அமைப்பற்குதான் பெரோவ்ஸ்கைட் டேன்டெம் சூரிய மின்கலம் என்பார்கள்.
இதனால் ஏகப்பட்ட பலன் உண்டு.. குறிப்பாக சூரிய ஒளியில் இருந்து அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும், அதே இடத்தில், அதே அளவிலான தகடில் முன்பைவிட அதிக மின்சாரமும் நமக்கு கிடைக்கும்.. இந்த திட்டத்துக்கு நம்முடைய மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது பெருத்த நம்பிக்கையை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications