இனி எதுவும் பண்ண முடியாது.. நிழலை கூட நம்ப முடியாது! ஆட்சிக்கு வந்தாலும் மோடிக்கு வைக்கப்பட்ட 8 செக்
சென்னை: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு 8 பெரிய செக் வைக்கப்பட்டு உள்ளது.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
செக்: இப்போது சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உதவியுடன் ஒருவேளை பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு 8 பெரிய செக் வைக்கப்பட்டு உள்ளது.
1. மோடியை எதிர்கொள்வதற்கான தனது பலத்தையும் துணிச்சலையும் ராகுல் நிரூபித்துள்ளார். எதிர்காலத்தில் அமோக பெரும்பான்மையுடன் ராகுல் மீண்டும் இந்தியாவின் பிரதமராக வருவதற்கான வாய்ப்புகளையும் இந்த தேர்தல் திறந்து விட்டுள்ளது. இனி ராகுலை இளவரசன், பப்பு என்றெல்லாம் பாஜக சொல்ல முடியாது.
2. அரசியல் தலைவர்களுக்கு எதிராக IT, ED அல்லது வேறு எந்த நிறுவனங்களையும் தவறாகப் பயன்படுத்த முடியாது. நாயுடு மற்றும் நிதீஷ் ஆகியோரை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்பதால், மோடி அவர்களைத் தாண்டி கூட்டணியை உருவாக்க வேண்டும். இந்த ஒரே காரணத்திற்காக, அவர் மாநில கட்சிகளுடன் நட்பாக இருக்க வேண்டும்.
3. பீகாரில் மாநில அளவில் கட்சியை காக்க பாஜகவை விட தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி பலம் நிதிஷுக்கு தேவை. இதனால் எதிர்காலத்தை மனதில் வைத்து நிதிஷ் இந்தியா பக்கம் கூட செல்லலாம். அந்த முடிவை எடுத்தால் அது பாஜகவிற்கு அடியாக இருக்கும். இதை தடுக்க திமுக போன்ற கட்சிகளை பகைக்காமல் எதிர்காலத்தில் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுக்களையும் நடத்த வேண்டும்.
4. மத சார்போ, கோவில் கட்டுவதோ மட்டும் வாக்குகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்கள் தங்கள் கருத்துக்களை உரத்த குரலில் தெரிவித்துள்ளனர். இதனால் மத அரசியலில் பாஜக சறுக்கி உள்ளது.
5. பாஜகவிற்குள் குஜராத் கும்பல், ராஜபுத்திரர்கள் மற்றும் மராத்தியர்கள் இடையே பிளவுகள் அதிகமாக உள்ளது. ராஜபுத்திரர்களும் மராத்தியர்களும் குஜராத்தியர்களை எதிர்கொள்ள தயாராகி வருவார்கள்.
6. மோடி பிரதமராக தொடர்ந்தால், நிர்மலாவுக்கு பதிலாக பியூஷ் கோபால் நிதியமைச்சராக வர வாய்ப்பு உள்ளது. அதேபோல் ராஜ்ய சபா வழியாக் பாஜகவை அமைச்சர்கள் பலர் பதவியை மீண்டும் பெற வாய்ப்பு இல்லை.
7. தமிழ்நாடு பாஜக தலைவர் உட்பட பல மாநில பாஜக தலைவர்கள் மாற்றப்படலாம். .
8. இனி வரும் நேரத்தில், மோடி அடிபணிந்து பாதுகாப்பற்றவராக தோன்றுவார். அவர் தனது சொந்த நிழலைக் கூட நம்புவதற்கு சிரமப்பட்டாலும் படவேண்டும். மன்மோகன் சிங்கைப் போல் மோடி சகிப்புத்தன்மை கொண்ட தலைவர் அல்ல. இதனால் எப்போது ஆட்சி கவிழும் என தொடர்ந்து பயத்தில் இருப்பார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications