முகத்தில் இருக்கும் புன்னகை மக்கள் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள்- எடப்பாடியாருக்கு கமல் வாழ்த்து
சென்னை: உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை மக்கள் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 66-வது பிறந்த நாள் இன்று உற்சாகமாக கொண்டாப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி இன்று காலை தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி, ஓபிஎஸ் வாழ்த்து
அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்ல ஆரோக்கியத்துடன் மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது ட்விட்டர் பக்கத்தில், இன்று பிறந்தநாள் நாள் காணும், மாண்புமிகு முதல்வர் அன்பு அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை ட்வீட்டுக்கு நன்றி
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என வாழ்த்தியுள்ளார். தமிழிசைக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடியார்.

ஓம் பிர்லா வாழ்த்து
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நலமும் வளமும் பெற பிரார்த்திப்பதோடு தங்களின் மகத்தான மக்கள் சேவை தமிழ்நாடு மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிகோலும் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வாழ்த்து
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசனும் முதல்வர் எடப்பாடியாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் @CMOTamilNadu அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் நன்றி
தமக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், னது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர், மாண்புமிகு துணை குடியரசு தலைவர், மாண்புமிகு பாரத பிரதமர், மாண்புமிகு தமிழக, தெலுங்கானா ஆளுநர்கள், மாண்புமிகு மத்திய அமைச்சர் பெருமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புப் பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இத்தருணத்தில், எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தேன். இருப்பினும் தொலைபேசி மூலம் என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications