அட.. ஜெ. பிறந்த நாள் அன்று இப்படியா?.. அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் திறப்பு!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது.
பொதுவாக அதிமுகவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, ஜெயலலிதா மட்டுமே கட்சியில் முன்னிறுத்தப்பட்டார். கட்சியின் ஒரே தலைமையாக அவர் நீடித்து வந்தார். அதேபோல் அதிமுக அலுவலகத்திலும் ஜெயலலிதா படமும், எம்ஜிஆர் படமும் மட்டுமே இருக்கும்.

இந்த நிலையில்தான் தற்போது சென்னை அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் திறக்கப்பட்டு இருக்கிறது. ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் மோடியின் படம் வைக்கப்பட்டு இருக்கிறது. இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியாக பிறந்தநாள் அன்று இந்த புகைப்படம் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் கருப்பு மற்றும் வெள்ளையில் இருக்கிறது. சுவற்றின் ஓரத்தில் இன்று காலைதான் இந்த புகைப்படம் மாட்டப்பட்டு பின் திறக்கப்பட்டது.
ஜெயலலிதாவும், மோடியும் இருக்கும் அந்த படத்தில் மோடிக்கு ஜெயலலிதா மனு ஒன்றை அளிக்கிறார். ஆளுயர படம் அலுவலக நுழைவாயிலின் ஒருபுறம் வைக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு அதிமுக - பாஜக கூட்டணி வைத்துள்ளதை அடுத்து மோடி படம் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படம், நரசிம்ம ராவ், வாஜ்பாய் ஆகியோரின் படங்கள் இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக மோடியின் படம் அந்த அலுவலகத்தில் இடம்பெற்று இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் ஒருவரின் புகைப்படம் இந்த அலுவலகத்தில் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications