உச்சாணிக்கு உயர்கிறது தமிழ்நாடு.. 25 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி.. பிரதமர் மோடி நாளை அடிக்கல்
சென்னை: அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் உட்பட 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். அந்த வகையில், பெரம்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட தெற்கு ரெயில்வேயில் 25 ரெயில்நிலையங்களை உலகத்தரத்திலான வசதிகளுடன் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.
நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்த, அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை, ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை அதாவது ஆகஸ்ட் 6ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடி: இதுகுறித்து, தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈரய்யா, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகனேசன் ஆகியோர் சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வேயின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்துள்ளனர். அதன் விவரம் இதுதான்:
"நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில்நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன் ஒரு அங்கமாக, 'அம்ரித் பாரத் ரெயில்நிலையங்கள்' என்ற திட்டத்தின் கீழ் ஆயிரத்து 309 ரெயில்நிலையங்களை உலகத்தரத்திலான வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது. அந்தவகையில், இந்தியா முழுவதும் 508 ரெயில்நிலையங்களை ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை 6-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
ரயில்வே திட்டம்: இதில், தெற்கு ரெயில்வேயில் உள்ள 25 ரெயில் நிலையங்களும் அடங்கும். இந்த ரெயில்நிலையங்களில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தும் வகையில் இந்தத்திட்டம் இருக்கும்.
"லிப்டு" பயணிகள் நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருக்க விசாலமான அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் தொடர்பு முறை, நடைமேம்பால மேற்கூரை, நகரும் படிகட்டுகள், வாகன நிறுத்தும் வசதி, மின் வினியோக வசதிகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும்.
தமிழகத்தில் முதல்கட்டமாக, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம்,கரூர், திருப்பூர், போத்தனுார், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்கள், ரூ.381 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன.
புதிய வழித்தடம்: அம்ரித் பாரத் ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டப்பணிகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே 4-வது புதிய வழித்தடம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. இதற்கான, பணிகளை விரைவில் தொடங்க இருக்கிறோம்.
அனைத்து முக்கிய ரெயில்நிலையங்களிலும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்திவிடுவோம். பறக்கும் ரெயில் நிலையத்தை சென்னை மெட்ரோ ரெயிலுடன் இணைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. பராமரிப்பு மற்றும் ரயில் பாதை மேம்பாட்டுப் பணிகளுக்காக 26 மின்சார ரயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பிறகு, மீண்டும் முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்" என்றனர்.

முன்னதாக, 3வது ரயிலாக 20645 / 20646 என்ற எண் கொண்ட சென்னை டூ நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது தெற்கு ரயில்வேயின் கீழ் இயக்கப்பட உள்ளது. நாளைய தினம் அதாவது ஆகஸ்ட் 6ம் தேதி இந்த ரயிலையும் பிரதமர் துவக்கி வைப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை..
பெருத்த மகிழ்ச்சி: எப்படி பார்த்தாலும், ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் நெல்லைக்கு வந்தே பாரத் சேவை துவங்கப்படும் என்று தெரிகிறது. எனினும், 18 ரயில் நிலையங்கள் உட்பட 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளையே அடிக்கல் நாட்ட உள்ளது, பொதுமக்கள் தரப்பில் மகிழ்ச்சியைகூட்டி வருகிறது.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications