அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் நரேந்தி மோடி இன்னும் பிரசாரம் செய்ய வரவில்லை. இந்நிலையில் தான் திடீரென்று நாளை மாலை 4 மணிக்கு ஆன்லைனில் முக்கிய மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மீட்டிங்கின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது.

பாஜகவுக்கு மொத்தம் 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் தான் தற்போது தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள், உள்ளூர் பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசாரத்துக்கு வராத பிரதமர் மோடி
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் செய்யவில்லை. கேரளா, அசாம், புதுச்சேரியில் தேர்தல் நடப்பதால் தான் தமிழகத்தில் பிரசாரம் தள்ளிப்போவதாக பாஜகவினர் தெரிவித்தனர். ஆனால் இந்த 3 இடங்களிலும் கடந்த 9 ம் தேதியே தேர்தல் முடிவடைந்த பிறகும் கூட மோடி, அமித்ஷா ஆகியோர் தமிழகத்தின் பக்கம் தலை காட்டவில்லை.
நாளை முக்கிய மீட்டிங்
இதனால் பாஜகவினர் கவலையடைந்துள்ளனர். இப்படியான சூழலில் தான் பிரதமர் மோடி நாளை முக்கிய மீட்டிங் நடத்துகிறார். இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், '' திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்த, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொலைநோக்கு பார்வையை விரிவாக எடுத்தரைத்த நமது தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணிக் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏப்ரல் 13 அன்று மாலை நடைபெறும் 'எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்' நிகழ்ச்சியின்போது, கடினமாக உழைக்கும் நம் செயல்வீரர்களுடன் உரையாடவிருக்கிறேன்'' என கூறியுள்ளார்.
என்ன காரணம்?
உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என்று எந்த தேர்தலாக இருந்தாலும் கூட வாக்குச்சாவடி முகவர்கள் மிகவும் முக்கியம். இவர்கள் தான் கிராமத்தில் மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்து தேர்தலில் கட்சிக்கான வாக்குகளை உறுதி செய்வார். அந்த வகையில் தான் தமிழகத்தில் 'எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்' நாளை நடைபெற உள்ளது. இதன்மூலம் பாஜக வாக்குச்சாவடி முகவர்களை பிரதமர் மோடி உற்சாகப்படுத்த உள்ளார். இது பாஜகவினருக்கு புத்துணர்வு அளிக்கும் என்று பாஜக மேலிடம் நம்புகிறது.
அதிருப்திக்கு நடுவே கலந்துரையடால்
முன்னதாக தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்று பாஜகவினர் புலம்பினர். இதுதொடர்பாக தமிழக பாஜகவில் குழப்பம் நீடித்தது. இதனால் கடந்த 3ம் தேதி புதுச்சேரி பிரசாரத்துக்காக சென்னை வந்த பிரதமர் மோடி பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கி உள்ள மயிலாப்பூர் தொகுதியில் ரோடு ஷோ செல்ல திட்டமிட்டார். ஆனால் தமிழக பாஜகவில் நீடித்த குழப்பத்தால் அவர்கள் கேன்சல் செய்தார்.
புதுச்சேரியில் மட்டும் பிரசாரம் செய்த அவர் மறுநாள் பாஜகவின் மையக்குழு கூட்டத்தை மட்டும் நடத்திவிட்டு சென்றார். அதன்பிறகு பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவில்லை. இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் மீதான அதிருப்தி தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் 'எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்' மூலமாக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி பேச திட்டமிட்டுள்ளார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?











Click it and Unblock the Notifications