ஆறுபடை கோயிலுக்கு சென்றாலும் கூட.. பிரதமர் மோடியை முருகன் மன்னிக்க மாட்டார்.. செல்வப்பெருந்தகை
சென்னை: திருப்பரங்குன்றம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் ஆறுபடை வீடுகளுக்கும் பிரதமர் மோடி சென்றாலும், முருகன் அவரை மன்னிக்க போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ், பாஜகவின் முகமாக பிரதமர் மோடி இருப்பதாக கூறிய செல்வப்பெருந்தகை, என்டிஏ கூட்டணியால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டேலா நகர்ப் பகுதியில் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளார்.

இதனால் திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்வது தேர்தலில் பின்னடைவை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் திருப்பரங்குன்றம் கோயில் விசிக் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்கள் உலகம் முழுவதும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமான தலைவர்கள் உருவாகுவார்கள். அப்படி தமிழ்நாட்டில் அபூர்வ தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி சர்ச்சையை ஏற்படுத்தக் கூடியவர்.. சர்ச்சையான பிரச்சனைகளை கையில் எடுப்பதும், மதக்கலவரங்களை ஏற்படுத்துவதும், அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதை அனுமதிக்க முடியாது என்று கங்கணம் கட்டி இருக்கும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் முகமாக பிரதமர் மோடி இருக்கிறார்.
அவர் ஒருமுறை இல்லை.. இன்னும் எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜகவுக்கு இடமில்லை. அவர் 100 முறை வந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார். அவர் திருப்பரங்குன்றம் மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் ஆறுபடை கோயில்களுக்கு சென்றாலும் மோடியை முருகன் மன்னிக்க மாட்டார். அதேபோல் தமிழ்நாட்டில் என்டிஏ ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை.
தமிழ்நாட்டில் மக்களால் அதிமுக - பாஜக கூட்டணி பலமுறை புறக்கணித்துவிட்டது. இம்முறை அதிமுக முகமூடியுடன் பாஜக வருகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் விட்டுக் கொடுத்துவிட்டார். அதனால் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications