அம்பேத்கர் வழியில் சீர்திருத்தங்களை செய்கிறார் பிரதமர் மோடி - அமைச்சர் எல்.முருகன் பேச்சு!
சென்னை : அம்பேத்கர் வழியில் சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார் பிரதமர் மோடி என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், அம்பேத்கர் வழியில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். அம்பேத்கர் வாழ்ந்த 5 இடங்களை புனித தலங்களாக்கி பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் என எல்.முருகன் தெரிவித்தார்.

அம்பேத்கர் சிலை
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை திறக்கும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அம்பேத்கர் உருவச் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெளியே கொண்டு வந்தது பாஜக
இந்த நிகழ்வில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "அம்பேத்கரின் பெருமைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு வந்தது பாஜக. அம்பேத்கர் சிலை மூடி வைக்கப்பட்டிருப்பது தலைகுனிவு ஏற்படுத்தும் விஷயமாகும். பிரதமர் மோடி பதவி ஏற்கும்போது அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் தன்னுடைய புனித நூல் என்று சொல்லி பதவியேற்றுக் கொண்டார்.

மோடி ஆட்சிக்கு வரும் முன்
2014 இல் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அம்பேத்கர் பிறந்த வீடு என்பது இந்த உலகத்திற்கு தெரியாமல் இருந்தது. அது ஆக்கிரமிப்பில் இருந்தது. அம்பேத்கருடைய 125 ஆவது பிறந்த தினத்தை நமது மத்திய அரசு கொண்டாடியது. அந்த நேரத்தில் அவர் பிறந்த இடம் மற்றும் அம்பேத்கர் டெல்லியில் மறைந்த இடம் என இந்த இரண்டு இடங்களையும் புனரமைத்து மிகப்பெரிய நினைவில்லம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாபெரும் தலைவர் மோடி
அதேபோல் அம்பேத்கர் லண்டனில் படித்தபோது வசித்த வீடு, அதுவும் அடையாளம் காணப்படாமல் இருந்தது. அம்பேத்கர் மும்பையில் இருந்த இடம், அம்பேத்கர் தீட்சை எடுத்த நாக்பூர் என இந்த ஐந்து இடங்களையும் புனிதத் தலங்களாக அறிவித்து ஒரே வருடத்தில் மேம்படுத்தி இந்த நாட்டிற்கு அர்ப்பணித்த மாபெரும் தலைவர் பிரதமர் மோடி" எனப் பேசினார்.

எல்.முருகன் மரியாதை
தொடர்ந்து, அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சென்னை துறைமுகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மிகப்பெரிய சிற்பியான அண்ணல் அம்பேத்கர், பொருளாதார நிபுணராகவும், நீர்நிலை மேலாண்மையில் வல்லுனராகவும் விளங்கியவர் என்றார்.

அம்பேத்கர் வழியில் மோடி
அம்பேத்கர் வழியில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். அம்பேத்கர் பிறந்த இடம், லண்டனில் அவர் படித்த வீடு, மும்பையில் வாழ்ந்த இல்லம், அவர் டெல்லியில் மறைந்த இடம் உள்பட அம்பேத்கரின் 5 இடங்களை புனித தலங்களாக்கி பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் எனத் தெரிவித்தார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications