மோடி சர்வாதிகாரி... எடப்பாடி உதவாக்கரை.. மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
சென்னை: மோடி ஒரு சர்வாதிகாரி என்றும், எடப்பாடி உதவாக்கரை எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வடசென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இவ்வாறு கூறினார். மேலும், இருவரும் நாட்டுக்கு தேவை இல்லாதவர்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் அல்ல என்றும், தேர்தல் நாட்களைத் தவிர வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதாக கூறிய மு.க ஸ்டாலின், மோடி ஒரு வெளி நாட்டு வாழ் பிரதமர் என விமர்சனம் செய்தார்.

மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ சிந்தித்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சனம் செய்த ஸ்டாலின், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளி வந்த உடனே எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழும் என்றார்.
ஹீரோவான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து மோடி பயந்து விட்டார் என்றும், திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விட்ட அதிமுக அரசு மற்றொரு பக்கம் பயிற்சி மையத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக தொடர்ந்து பாடுபடும் என்றும் மு க ஸ்டாலின் உறுதியளித்தார்.
வடசென்னையில் பிரச்சாரம் செய்ததை தொடர்ந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications