பிரதமர் மோடியின் மெகா பிளான்? தமிழகத்திற்கு மீண்டும் விசிட்.. எங்கெல்லாம் செல்கிறார்?விவரம்!
சென்னை: பிரதமர் மோடி ஆகஸ்டு 26 ஆம் தேதி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தூத்துக்குடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் வந்திருந்த நிலையில் மீண்டும் ஒரு முறை தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்தபடி நேரலையில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரதமர் மோடி கடந்த 26 ஆம் தேதி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். கடந்த 26 ஆம் தேதி தூத்துக்குடி வருகை தந்த பிரதமர் மோடி அங்கு ரூ.460 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலைய பகுதியை திறந்து வைத்தார். மேலும் ரூ. 4,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து மறுநாள் திருச்சி விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம் சென்றார். சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கு ராஜராஜ சோழன் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் ராஜராஜ சோழனின் பெருமைகளை பேசினார். மேலும் தமிழகத்தில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று பேசினார்.
இந்த 2 நாட்கள் பயணத்தில் பிரதமர் மோடி எந்தவித அரசியலும் பேசாமல் சென்றார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மோடியின் பயணம் கவனம் பெற்று இருந்தது. இந்த நிலையில் வரும் ஆகஸ்டு 26 ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 26 ஆம் தேதி சிதம்பர நடராஜர் கோவிலுக்கு பிரதமர் மோடி வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, நேரலையில் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்க்க பாஜக முயற்சிகள் மேற்கொண்டு வரும் சூழலில், மோடியின் பயணம் கவனம் பெற்றுள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்?











Click it and Unblock the Notifications