அமைச்சர் விஜயபாஸ்கரை தட்டிக்கொடுத்த மோடி... வட்டமடிக்கும் வதந்தி
சென்னை: சென்னை விமானநிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை மட்டும் பிரதமர் மோடி இடது கையால் தோளில் தட்டிக்கொடுத்ததை அடுத்து காலை முதலே வதந்திகள் வட்டமடிக்க தொடங்கியுள்ளன.
ஐஐடி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தது. அமைச்சர்கள் வரிசையில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் நின்று மோடியை வரவேற்றார்.

விமானத்தை விட்டு இறங்கிய மோடிக்கு ஆளுநர் மரியாதை செய்ததை அடுத்து, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அவர்களை தொடர்ந்து தம்பிதுரை, மற்றும் அமைச்சர்கள் கையில் ஒற்றை ரோஜாவுடன் நின்று மோடியை வரவேற்க நின்றனர்.
அமைச்சர்களிடம் விறுவிறுவென ரோஜாப்பூவை கையில் வாங்கிக்கொண்டு வேகமாக வந்த பிரதமர் மோடி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அருகே வந்த போது மட்டும், அவர் அளித்த ரோஜாவை வாங்கியதோடு தனது இடது கையால் விஜயபாஸ்கரின் தோளில் ஓங்கி தட்டிக்கொடுத்து சிரித்தார். இது தான் அரசியல் களத்தில் இன்று காலை முதலே பெரும் பேசு பொருளாக உள்ளது.
மோடி ஒருவரை இடதுகையால் தட்டிக்கொடுக்கிறார் என்றால் அவருக்கு சிக்கல் வரப்போகிறது என அர்த்தம் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் கொளுத்திப்போட அது றெக்கை கட்டி பறக்கிறது. ஜெயலலிதா மறைவின் போது இப்படித்தான் சசிகலா தலையில் மோடி இடது கையால் தடவி ஆறுதல் கூறியதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனிடையே விஜயபாஸ்கர் குட்கா வழக்கில் ஏற்கனவே விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில் இன்று காலை நடந்த சம்பவத்தை அப்படி சாதாரண நிகழ்வாகவும் கருதிவிட முடியவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications