நீங்கள் சொன்னதை எல்லாம் செய்ய தமிழர்கள் என்ன அதிமுக கட்சியா? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!
அதிமுகவை கட்டுப்படுத்துவது போல மோடி தமிழக மக்களை கட்டுப்படுத்த நினைக்கிறார், ஆனால் அவரால் தமிழர்களை கட்டுப்படுத்த முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
சென்னை: அதிமுகவை கட்டுப்படுத்துவது போல மோடி தமிழக மக்களை கட்டுப்படுத்த நினைக்கிறார், ஆனால் அவரால் தமிழர்களை கட்டுப்படுத்த முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரே நாளில் இன்று நான்கு இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
அதன் ஒருகட்டமாக அவர் கிருஷ்ணகிரியில் பேசினார். அதில் தமிழர்களின் பெருமை குறித்து அவர் பேசினார்.

என்ன பேச்சு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரியில் பேசும் போது, தமிழர்களின் குரல் மத்தியில் ஒலிக்க வேண்டும். இந்தியா பல பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு பல மொழி, மதம், கலாச்சாரம் இருக்கிறது. பல வேறுபாடுகள் சேர்ந்ததுதான் இந்தியா. அதனால்தான் தமிழகத்தின் கலாச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழர் குரல்
தமிழர்களின் குரலை புறக்கணித்து வருகிறார்கள். தமிழர்களின் குரலை புறக்கணிப்பது சரியான இந்தியாவாக இருக்க முடியாது. அனைத்து கலாச்சாரத்தையும் நாம் மதிக்க வேண்டும். திமுக, காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் எல்லாம் அதனால்தான் மோடியை எதிர்க்கிறோம்.

மோடி எப்படி
மோடி ஒரே சிந்தனையையே நாடு முழுக்க திணிக்க நினைக்கிறார். அவருக்கு நாட்டின் பன்முகத்தன்மை புரியவில்லை. அதிமுகவை கட்டுப்படுத்துவது போல மக்களை கட்டுப்படுத்த நினைக்கிறார். ஆனால் அவரால் தமிழக மக்களை கட்டுப்படுத்தவே முடியாது. தமிழக மக்களை யாராலும், எப்போதும் கட்டுப்படுத்த முடியாது.

தமிழர்கள் எப்படி
யாரும், எங்கிருந்தும் தமிழர்களை கட்டுப்படுத்த முடியாது. தமிழர்கள் நினைத்தால்தான் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த முடியும். தமிழர்களை அன்பால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். மோடியின் வெறுப்பரசியலால் தமிழர்களை கட்டுப்படுத்த முடியும். மோடி கொஞ்சம் தமிழர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications