தமிழர் பாரம்பரிய உடை.. சதுரங்க கரை வச்ச வேஷ்டி.. அங்கவஸ்திரத்துடன் வந்த பிரதமர் மோடி
சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு செஸ் கட்டம் போட்ட கரை கொண்ட வேஷ்டி சட்டையில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார்.
Recommended Video
சென்னை அருகே மாமல்லபுரம் பூஞ்சேரியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளின் தொடக்க விழா இன்று நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கியது.
இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரத்தில் வருகை தந்துள்ளார். பிரதமர் மோடி வருவதற்குள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வேறு விமானம்
அவர் வானிலை மாற்றத்தினால் வேறு விமானத்தில் வர 25 நிமிடங்கள் தாமதமாகின. இந்த நிலையில் அவர் சரியாகத 5.15 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தமிழர் உடையில் மோடி
சென்னைக்கு வந்துள்ள பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியை அணிந்து கொண்டு வந்துள்ளார். அவர் அணிந்துள்ள வேஷ்டியில் சதுரங்க கட்டங்கள் போடப்பட்டுள்ளன. அது போல் அங்கவஸ்திரத்திலும் சிறிய சிறிய சதுரங்க கட்டங்கள் உள்ளன. இவை பார்ப்பதற்கு அழகாக உள்ளன.

ஜிப்பா பேன்ட்
வழக்கமான ஜிப்பா பேன்டில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் மோடி தமிழர் உடையில் வந்திருப்பது அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது. இவரது உடையை பார்த்து தமிழக பாஜகவினர் பூரிப்படைந்துள்ளாரகள். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை கடந்த 2019ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்தார்.

சீன அதிபருடன் சந்திப்பு
அப்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வந்திருந்தார். மேலும் சீன அதிபருடனான விருந்து நிகழ்ச்சியில் கூட தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளே பரிமாறப்பட்டன. இதனால் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பெருமிதம் பொங்க பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வந்தார்கள்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications