Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்.எஸ்.எஸ். பெயரில் ‘இந்தியா’ இல்லை.. அது புனிதமா? .. மோடி செய்வது விஷம பிரச்சாரம்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தங்களின் கூட்டணிக்கு 'இந்தியா' எனப் பெயர்வைத்திருப்பதைப் பிரதமர் மோடி, மிக மோசமாக விமர்சித்திருக்கிறார்.

பிரதமர் மோடி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாராந்திர கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், 'இந்தியன் முஜாஹிதீன் மற்றும் பாப்புலர் ஃப்ரென்ட் ஆஃப் இண்டியா' என்ற அமைப்புகளின் பெயர்களில் கூடத்தான் 'இண்டியா' என்ற பெயர் உள்ளது என்று மிக மோசமான உதாரணம் ஒன்றைக் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

 PM Modis Attack On Opposition Front

மோடியின் பேச்சுக்கு உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பை பதிவு செய்த ராகுல் காந்தி, "நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எங்களை அழையுங்கள் மோடி. ஆனால் நாங்கள் இந்தியா. மணிப்பூரைக் குணப்படுத்த, ஒவ்வொரு பெண்ணின், குழந்தையின் கண்ணீரைத் துடைக்க நாங்கள்தான் உதவுவோம். மக்கள் அனைவருக்குமான அன்பையும் அமைதியையும் திரும்பக் கொண்டு வருவோம். மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணத்தை மறுபடியும் மறு உருவாக்கம் செய்வோம்" என்று கூறியிருந்தார்.

மணிப்பூர் இனக் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச மறுக்கும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் தங்களின் கூட்டணிக்கு வைத்துள்ள பெயரை மட்டும் உடனடியாக விமர்சிக்க நேரம் இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்புகின்றார்கள் எதிர்க்கட்சிகள். உண்மையில் 'இந்தியா' கூட்டணியைப் பார்த்து அஞ்சுகிறாரா மோடி? இவ்வளவு காட்டமாக அவர் பேச என்ன காரணம்?

 PM Modis Attack On Opposition Front

பச்சைத் தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவர் சு.ப.உதயகுமாரிடம் கேட்டோம். அவர் அனல் பறக்கும் பல கருத்துகளை முன்வைத்து விவாதித்தார்.

"ஒட்டுமொத்த பாஜகவே தோல்வி பயத்தில் இருக்கிறது. பிரதமர் மோடியும் தோல்வி பயத்தில் இருக்கிறார். இந்த மணிப்பூர் கலவரம் என்பது பாஜகவுக்கு மிகப் பெரிய தோல்வியாக அவர்களுக்கு அமைந்திருக்கிறது.

சொல்லப்போனால் இதுவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒருமுறைதான் மணிப்பூருக்குச் சென்றிருக்கிறார். இந்தியாவின் பிரதமர் மோடி இதுவரை அந்தப் பக்கமே போகவில்லை. தங்களின் இயலாமையை மறைப்பதற்காக பாஜக பல முயற்சிகளை எடுத்துவருகிறது.

 PM Modis Attack On Opposition Front

ஒரு எதிர்க்கட்சி கூட்டணி அதற்கு என்ன பெயர் வைத்திருக்கிறது என்பது முக்கியமா? இந்தியாவிலுள்ள மாநிலங்களின் ஒன்றான மணிப்பூர், கடந்த 3 மாதங்களுக்கு மேல் பற்றி எரிந்துகொண்டிருக்கிறதே அது முக்கியமா?

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எல்லோரும் மணிப்பூர் பற்றி விவாதிக்கவேண்டும் என்று கேட்கிறார்கள். பிரதமர் மோடி அது பற்றி கருத்துச் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அதன்பிறகு, கிட்டத்தட்ட 70 நாள்களுக்குப் பிறகு மணிப்பூரில் நடைபெற்றுவரும் கொடூர சம்பவங்கள் பற்றி பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கிறார்.

 PM Modis Attack On Opposition Front

மணிப்பூர் விவகாரம் தொடங்கி இத்தனைக் காலம் கழித்து அவர் பேசுகிறார். அதற்கு முன்னால் அவர் அமெரிக்காவுக்குச் சென்றார். அதற்குப்பின் பிரான்சுக்குச் சென்றார். ஆனால், மணிப்பூர் பற்றி எரிவது குறித்து அவர் பேசவில்லை. ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தவில்லை.

ஆனால், எதிர்க்கட்சியினர் தங்களின் கூட்டணிக்கு வைத்துள்ள பெயர் பற்றி உடனே பேசுகிறார். எதிர்க்கட்சியினர் தங்களின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்திருப்பது இவருக்குப் பிரச்சினையாக இருக்கிறது என்றால், இவருக்கு இந்த நாட்டை Republic of India என்று அழைக்கவேண்டுமா? அல்லது வேறு ஏதாவது பெயரைச் சொல்லி அழைக்கவேண்டுமா? we the people of india என்று சொல்லப் போகிறோமா? அல்லது we the people of bjp land என்று சொல்லப் போகிறோமா?

 PM Modis Attack On Opposition Front

அவர்களே Made in india என்றுதான் சொன்னார்கள். பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்ஹா என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு தனி நபர் மசோதாவை நாடாளுமன்றத்திலே சமர்ப்பித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நாங்கள் ஒரு ஆய்வுக் கூடத்தை அமைக்கப் போகிறோம். அதன் மூலம் பண்டையக் கால இந்தியாவைப் பற்றிய பெருமைகளை எல்லாம் அதன் மூலம் மக்கள் மத்தியில் பரப்பப் போகிறோம் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த ஆய்வுக் கூடத்திற்கு அவர் வைத்த பெயர் Golden Age of ancient india. இதிலும் 'இந்தியா' என்ற பெயர் இருந்தது.

 PM Modis Attack On Opposition Front

அதாவது பாஜகவைச் சேர்ந்தவர்கள் 'இந்தியா' எனப் பெயர் வைத்தால், அது பெருமைப்படத்தக்கதாகவும் அதே எதிர்க்கட்சியினர் தங்களின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டினால், அது ஆபத்தானதாகவும் பிரதமருக்குத் தெரிவது விநோதமாக இருக்கிறது. வேடிக்கையாக இருக்கிறது.

கடந்த 1977ஆம் ஆண்டு முதல் இந்திய அரசியலானது மாறிக் கொண்டிருக்கிறது. அதுவரை காங்கிரஸ் தனித்த கட்சியாக நாட்டை ஆண்டுகொண்டு இருந்தது. மிகப்பெரிய தலைவர்களான நேரு, இந்திரா காந்தி போன்ற ஆளுமை மிக்கத் தலைவர்கள் ஒட்டுமொத்த அரசியலமைப்பை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.

1977இல் ஜனதா கட்சி ஒரு கூட்டணி அமைத்து அந்த நிலையை மாற்றியது. அதற்கு அடுத்தும் கூட நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்வு அளித்து மறுபடியும் காப்பாற்றி வந்தார்.

 PM Modis Attack On Opposition Front

இவருக்குப் பின் வந்த தேர்தல்கள் அனைத்திலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடியே தேர்தலைச் சந்தித்து வந்தார்கள். 1998இல் வாஜ்பாய் அரசு அமைந்ததும்கூட கூட்டணியில்தான். அதன்பின்னர் மன்மோகன் சிங் ஆட்சியும் அப்படித்தான். இப்போது பாஜக 330 இடங்களில் பாஜக வெற்றிபெற்றபோதுகூட 'என்.டி.ஏ' என்ற கூட்டணியை உருவாக்கியே வென்றது.

சமீபத்தில்கூட ஏராளமான லெட்டர் பேட் கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து பிரதமர் மோடி, மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கிவிட்டதாகக் காட்டினார். இதன் மூலம் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இனி வருங்காலங்களில் தேர்தலை ஒரு கூட்டணியின் மூலமாகவே கட்சிகள் சந்திக்க முடியும். தனிக் கட்சி என்பது எல்லாம் எடுபடாது.

அந்த வகையில்தான் 'இந்தியா' என்ற பெயரை வைத்துத் தேர்தலைக் காங்கிரஸ் தலைமையிலான அணி சந்திக்க இருக்கிறது. இக்கூட்டணி வரவேற்கத்தக்கக் கூட்டணி. இன்றைக்கு உள்ள நிலையில் விரும்பத்தக்கது. இந்தியா இப்போது உள்ள நிலைமையில் ஒரே நம்பிக்கை காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணிதான்.

பாஜக கூட்டணி வருகின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 100 இடங்களில் வெற்றி பெற்றால் அதுவே மாபெரும் அதிசயமாக இருக்கும்'' என்றார்.

இவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய பத்திரிகையாளர் டி.என்.ரகு, "2002இல் குஜராத் கலவரம் நடந்த பிற்பாடு அன்றைய பிரதமர் வாஜ்பாயும் உள்துறை அமைச்சர் அத்வானியும் மோடி விசயத்தில் எந்த நிலைப்பாட்டை எடுத்தார்களோ, அதே நிலைப்பாட்டைத் தான் இன்று பிரதமர் மோடி, மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் விசயத்தில் எடுத்து வருகிறார்.

மணிப்பூரில் அமைதி திரும்பாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே பிரேன் சிங்தான். பிரதமர் மோடி தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும் போது எதிர்க்கட்சியினர் மணிப்பூர் விவகாரத்தைப் பற்றி விவாதித்தால், நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றித்தான் விவாதித்திருக்கவேண்டும். ஏனென்றால் இப்போது பற்றி எரிவது மணிப்பூர்தான்.

ஆனால் அதைவிட்டுவிட்டு, கூட்டணிக்கட்சிகள் தங்களது அணிக்கு 'இந்தியா' எனப் பெயர் வைத்திருப்பதைப் பற்றி மோடி விவாதிக்கிறார். இதைப் பற்றி மோடி பேச வேண்டிய அவசியம் என்ன?

மோடியின் பேச்சு பற்றி ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் மிகத் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்கள். 'இது திசை திரும்புவதற்கான முயற்சி' என்று கூறியிருக்கிறார்கள். மேலும் மல்லிகார்ஜுன கார்கே, 'நீங்கள் ஈஸ்ட் இண்டியா கம்பெனி பற்றிப் பேசுகிறீர்கள். நார்த் ஈஸ்ட் பற்றிப் பேசுங்கள்.

இதே குக்கி இன மக்களை முதல் உலகப்போரில் பங்கேற்க வேண்டும் என பிரிட்டிஷ் அரசாங்கம் சொன்னபோது அதை எதிர்த்தார்கள். ஆங்கிலோ குக்கி போர் நடந்தது நூறு ஆண்டுகள் முன்பு. அந்தக் காலத்திலிருந்து இந்தப் பகுதியில் வாழ்ந்துவருபவர்கள் குக்கி இன மக்கள். அந்த மக்களுக்குப் பிரதமர் மோடி என்ன உதவி இருக்கிறார்?

பண மதிப்பிழப்பு விவகாரம் என்றால், நிதி அமைச்சர் பேச மாட்டார். மோடிதான் அறிவிப்பார். ஜோ பைடனை சந்திக்கும்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாது. மோடிதான் தெரிவார். நாட்டில் தடுப்பூசியை அறிமுகம் செய்யும்போது நாட்டின் சுகாதார அமைச்சர் இருக்கமாட்டார். மோடிதான் அறிமுகம் செய்வார்.

சாதனை எல்லாம் செய்யும்போது மோடி இருப்பார். கோப்பை எல்லாம் வாங்கும்போது மோடி இருப்பார். ஆனால் பிரச்சினை வரும்போது மோடி இருக்கமாட்டார். இது எப்படி? ஒரு உண்மையான தலைவர் என்றால், சோதனை அல்லது தோல்வி வரும்போது முன்னதாக நிற்கவேண்டும். வெற்றி பெறும்போது தங்களின் 'டீம்' ஐ கூப்பிட வேண்டும். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.

இன்னொன்றையும் சொல்கிறேன். மோடி குறிப்பிட்டுள்ள பெயர்கள் எல்லாம் மிகமிக விசமத்தனமானது. 'இண்டியன் முஜாஹிதீன்', 'பாப்புலர் ஃப்ரென்ட் ஆஃப் இண்டியா' இவை இரண்டும் இஸ்லாமிய மக்களுக்குத் தவறான அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த பெயர்கள். அதை வேண்டும் என்றே மோடி குறிப்பிடுகிறார்.

பஜ்ரங் தள் என்ற பெயரில் இந்தியா என்பதே கிடையாது. அவர்கள் என்ன நாட்டு நலனுக்காக உழைக்கின்ற இயக்கமா? ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் பெயரில் கூடத்தான் இந்தியா என்பது இல்லை. இந்த அமைப்புகள் எல்லாம் பாபர் மஜித் இடிப்பு விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்த உழைத்த புனிதமான இயக்கங்களா?

'இந்தியா', 'நாடு', 'நாட்டுப் பற்று' என்று சொன்னால் அது தேசப் பற்று கிடையாது. 'பாரத்', 'தேசம்' என்று சொன்னால்தான் அது தேசப்பற்றா? நான் கேட்கிறேன். 'இந்தியா' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூடினால், அந்தப் பெயரே கெட்ட பெயராக மாறிவிடுமா?" என்கிறார் ரகு

பாஜக ஆட்சியில் இந்தியாவில் நிறையச் சர்ச்சைகள் நடந்தன. இப்போது 'இந்தியா' என்ற பெயரையே பாஜக சர்ச்சையாக்கி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+