2026..அசைன்மெண்டை முடித்த அமித்ஷா! மோடியின் விசிட்டின் டார்கெட்டே இது தானா? டிடிவி செம குஷி! ஓபிஎஸ்?
சென்னை: இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. தூத்துக்குடி விமான புதிய முனையத்தை தூக்கி வைப்பதோடு பல்வேறு நலத்திட்டங்களையும் துவக்கி வைக்கிறார். 2026 தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு புதிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பதாகவும், அதைவிட அதிமுக தலைவர்களை சந்தித்து கூட்டணி தொடர்பாக சில முக்கிய விஷயங்களை வலியுறுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம் என்கின்ற தமிழக பாஜகவினர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி உருவாகி இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுகிறார். இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகை தரும் பிரதமர் மோடியை தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பார் என கூறப்படுகிறது.

தொடர்ந்து பாஜக முக்கிய தலைவர்கள், எம்எல்ஏக்களை பிரதமர் நரேந்திர மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து 8.30 மணிக்கு 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூத்துக்குடி புதிய விமான நிலைய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து விமான நிலையத்தை பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி சுமார் 4800 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 3600 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் மற்றும் சாலை திட்டங்களை துவக்கம் பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி திறந்து வைக்கிறார்.
அன்று இரவே தூத்துக்குடியில் இருந்து சிறப்பு விமான மூலம் திருச்சி செல்லும் பிரதமர் மோடி அங்கு தனியார் விடுதியில் தங்குகிறார். நாளை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் பிரதமர் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவின் முக்கிய நிகழ்வான நான்காம் நாள் நிகழ்ச்சியில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார் .தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் வழிபாடு நடத்தும் பிரதமர் இந்திய தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அங்கு ராஜேந்திர சோழனின் நினைவு நாணயமும் வெளியிடப்படுகிறது. நரேந்திர மோடி முன்னிலையில் இசையமைப்பாளரும் மாநிலங்களவை எம்பியுமான இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2.25 மணிக்கு திருச்சி செல்லும் பிரதமர் அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி செல்கிறார். இவையெல்லாம் அரசு நிகழ்வுகள். ஆனால் அரசியல் நிகழ்வுகளும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டத்தில் இருக்கிறது.
இன்று இரவே திருச்சி செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு தமிழக பாஜக தலைவர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாளை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கலாம் என சொல்லப்படுகிறது. ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய நோக்கமே எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பது தான் என்கின்றனர் தமிழக பாஜகவினர்.
2026 தேர்தலை அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறி வருகிறார். ஆனால் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது ஒரு புறம் இருக்க ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை கூட்டணிக்குள்ளும் கட்சிக்குள்ளும் அனுமதிக்க முடியாது என பிடிவாதமாக இருக்கும் நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எடப்பாடி இடம் பேசுவார் எனக் கூறப்படுகிறது. தங்களை சந்திக்க நேரம் ஒதுக்காவிட்டாலும் தங்களை பற்றி தான் பேசுகிறார் என்ற தகவலால் ஓபிஎஸ், டிடிவி தரப்பு உற்சாகத்தில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications