பாம்பன் பாலம் திறப்புக்காக பிரதமர் மோடி வருகை- 3 நாட்கள் மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை!
சென்னை: பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தருவதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை மறுநாள் ஏப்ரல் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 5-ந் தேதி இலங்கை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, ராமேஸ்வரம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தைத் திறந்து வைக்க உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கக் கூடியதுதான் பாம்பன் ரயில்வே பாலம். இது மொத்தம் 2.2 கிலோ மீட்டர் தொலைவாகும். பாம்பன் ரயில்வே பாலம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது.
பாம்பன் ரயில்வே பாலம் கட்டி 106 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் உறுதித்தன்மையும் குறைந்தது. இதனையடுத்து 2019-ம் ஆண்டு மண்டபம்- பாம்பன் இடையே புதிய ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. ரூ550 கோடியில் கட்டப்பட்ட புதிய பாம்பன் ரயில்வே பாலத்தின் அனைத்து பணிகளும் கடந்த ஆண்டு நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ரயில்கள் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டன. பாம்பன் தூக்கு பாலம் இயக்கப்பட்டு கப்பல்களும் இயக்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடியால் இந்த பாலம் திறந்து வைக்கப்பட வேண்டும் என்பதற்காக பல முறை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 5-ந் தேதி இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 6-ந் தேதி ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வருகை தருவதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரன், பாம்பன் மீனவர்கள் ஏப்ரல் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல பாம்பன் பால பகுதியில் நிறுத்தப்பட்ட மீன்பிடி படகுகள் வேறு பகுதிக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications