தமிழகத்தில் சதுரங்க வல்லபநாதர் கோயில் வரலாறை கூறிய பிரதமர் மோடி! கோயிலின் சிறப்பு என்ன?
சென்னை: தமிழகத்திற்கும் செஸ் விளையாட்டிற்கும் தொடர்பு உண்டு என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். அத்துடன் தஞ்சையில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோயிலின் வரலாறு குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
Recommended Video
இன்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
முன்னதாக விழா நடைபெறும் இடத்திற்கு தாமதமாக வந்த பிரதமர் நரேந்திர மோடி, உள்அரங்கத்தில் கையை அசைத்தவாறே வந்தார். அவரை முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று வரவேற்றார்.

பிரதமர் மோடி
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும் செஸ் விளையாட்டிற்கும் தொடர்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் பல விளையாட்டு போட்டிகளை குறிப்பதாகவே உள்ளன என்றார் பிரதமர் மோடி.

தஞ்சை மாவட்டம்
தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் செஸ் விளையாட்டுடன் தொடர்புடையது ஆகும். இங்கு இறைவன் அரசியுடன் செஸ் விளையாடினார் என்பது ஐதீகம் என்றார். இந்த கோயில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மன்னார்குடி சாலையில் பூவனூர் என்ற கிராமத்தில்தான் அந்த கோயில் உள்ளது.

1500 ஆண்டுகள்
இந்த கோயில் 1500 ஆண்டுகள் பழமையானது. இதன் பெயர் சதுரங்க வல்லபநாதர் கோயில் ஆகும். இது 103 ஆவது சிவத்தலமாகும். இந்த கோயிலின் மூலவர் சதுரங்க வல்லபநாதர் உள்ளார். வசுசேனன் என்ற மன்னருக்கு மகளாக தோன்றினார் அம்பிகை. சிவன் சித்தர் வேடத்தில் வந்து தான்தான் சதுரங்க விளையாட்டில் சிறந்தவன் என கூறினார்.

அம்பிகை
அப்போது அந்த வசுசேனன் அப்படியா என் மகளுடன் விளையாடி ஜெயிக்க முடியுமா. அம்பிகையும் நன்றாக விளையாடுவார் என்றார். உடனே சித்தர் வேடத்தில் இருக்கும் சிவன் ஒப்புக் கொள்கிறார். இதையடுத்து சிவனும் அம்பிகையும் சதுரங்கம் விளையாடுகிறார்கள். இதில் சிவபெருமான் வெற்றி பெறுகிறார்.

சதுரங்க வல்லபேசுவரர்
இதையடுத்து தனது சிவபெருமான் வடிவத்தில் தோன்றினார். இதனால் மகிழ்ந்த மன்னன் தனது மகளை சிவனுக்கு மணமுடித்து கொடுத்தார். இதனால் சிவனுக்கு சதுரங்க வல்லபேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயிலில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி ஆகிய இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. எனவே இந்த கோயிலின் வரலாற்றை வைத்து சதுரங்கம் விளையாட்டு தமிழகத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தோன்றியது என அறியப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications